மகாராட்டிரா – ஜார்க்கண்ட் தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த 588 கோடி ரூபாய், பரிசுப் பொருட்கள் பறிமுதல்

2 Min Read

மும்பை, நவ.8 மகாராட்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் மற்றும் 14 மாநில இடைத் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.588 கோடி மதிப் பிலான பணம், பரிசுபொருள், மது பானங்கள் மற்றும் போதைப் பொருட் களை தேர்தல் ஆணையம் கைப்பற்றியது.
மகாராட்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல், 14 மாநிலங்களில் இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. அப்போது வாக்காளர்களை கவர பணம் மற்றும் பரிசு பொருட்கள், மது பானங்கள், போதைப் பொருட்கள் கொடுக்கப்படுவதை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது. அதன்படி பாதுகாப்பு படையினர் பல குழுக்களை அமைத்து மகாராட்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் இடைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மகாராட்டிரா: மகாராஷ்டிரா மாநிலத் தில் நடைபெற்ற சோதனையில் ரூ.90.5 கோடி மதிப்பில் விலையுயர்ந்த ஆபரணப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ரொக்கம் ரூ.73.1 கோடி கைப்பற்றப்பட்டது. மது மற்றும் போதைப் பொருட்கள் ரூ.38 கோடி மதிப்பில் கைப்பற்றப்பட்டன. வாக்காளர்களுக்கு பரிசாக வழங்க ரூ.42.5 கோடி மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத் தில் ரூ.128 கோடி மதிப்பில் இலவச பரிசு பொருட்கள், ரொக்கம் ரூ.10.5 கோடி, ரூ.9 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், ரூ.7.1 கோடி மதிப்பிலான மது பானங்கள், ரூ.4.2 கோடி மதிப்பில் தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இரு மாநிலங்களிலும் பறிமுதல் செய்யப்பட்டதை ஒப்பிட்டால், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கைப்பற்றியதைவிட பல மடங்கு அதிகம் இருந்தது. மகாராட்டிராவில் கடந்த 2019-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ரூ.103.6 கோடி மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் அங்கு இதுவரை கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.280 கோடியை எட்டிவிட்டது. ஜார்கண்ட்டில் 2019-ஆம் ஆண்டு ரூ.18.8 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆனால், அங்கு தற்போது ரூ.158 கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் இடைத் தேர்தல் அறிவிக் கப்பட்ட 2 மக்களவை தொகுதிகள் மற்றும் 48 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். இதில் இதில் ரூ.70.6 கோடி மதிப்பிலான பொருட்கள், ரூ.21.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், ரூ.9.4 கோடி மதிப்பில் தங்கம், வெள்ளி பொருட்கள், ரூ.8.9 கோடி ரொக்கம், ரூ.7.6 கோடி மதிப்பிலான மது பானங்கள் என மொத்தம் ரூ.118 கோடிக்கு பறிமுதல் செய்யப்பட்டன.
மகாராட்டிரா, ஜார்க்கண்ட், மற்றும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 14 மாநிலங்களில், மொத்தம் ரூ.588 கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருட்களை தேர்தல் ஆணையம் கைப்பற்றியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *