கோழிக்கோடு, ஜூலை 28 தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் 26.07.2023 அன்று கேரள மாநிலம், கோழிக்கோட்டில், பொது சிவில் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில மாநாட்டில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:
ஒன்றிய அரசின் எதேச்சதிகார மக்கள் விரோத போக்கின் அடை யாளமாக பொது சிவில் சட்டம் கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேரள மாநிலம், கோழிக்கோட்டில், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் சார்பில் நடைபெறும் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநில மாநாட்டில் தி.மு.க. சார்பில் பங்கேற்று உரை நிகழ்த்தும் நல்வாய்ப்பினை வழங் கிய தமிழ்நாடு முதலமைச்சர் மற் றும் இந்த எழுச்சிமிகு மாநாட்டில் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு குரல் எழுப்பும் நல்வாய்ப்பினை வழங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தின், (Ex.MP), ஆகி யோருக்கு நன்றி!
தமிழ் நாடு முதலமைச்சர் 13.07.2023 அன்று பொது சிவில் சட்டம் அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதிபதி .ரிதுராஜ் அவஸ்டி அவர்களுக்கு கடிதம் எழுதி யுள்ளார். பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்காக ஒரேநாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் என்று கூறுவது மாயை. Unity in Diversity – – வேற்றுமையில் ஒற்றுமை காண்கி றோம். இதை அறிந்தும் அறியாதது போல் நடிக்கும் ஒன்றிய அரசை வரும் தேர்தலில் வீட்டுக்கு அனுப் புவதே நம் முக்கிய பணி. அதற் காகவே அமைக்கப்பட்டது போல் தோன்று கிறது இந்த மேடை -_ மாநாடு.
பன்முக சமூக கட்டமைப்பிற்கு பெயர் பெற்ற இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வலுவான எதிர்ப்பை தெரிவிப்பதற்காக தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க இந்த மேடையில் உரை நிகழ்த்திக் கொண்டு இருக் கிறேன். ஒருவர் தான் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கும், கடைப் பிடிப்பதற்கும், பரப்புவதற்குமான உரிமை உண்டு. மதச்சார்பின்மை என்பது இந்திய அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பு, இந்த கட்டமைப்பை சீர்குலைக்கும் உந்து சக்தியாக வருவது தான் பொது சிவில் சட்டம். இச்சட்டம் அமலுக்கு வந் தால் அரசமைப்புச் சட்டம் வழங்கும் பாதுகாப்புகள் வலுவிழக்கும் என்ப தில் மாற்றுக் கருத்து இல்லை. இந்தியா பல்வேறு மதங்கள் பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு உணவு, பல்வேறு வழி பாடுகள், பல்வேறு உடைகள் என பன்முகத்தன்மைக் கொண்ட நாடு இதில் பொது சிவில் சட்டம் போன்ற ஒரு சட்டத்தைத் திணிக் கும் செயல் மக்கள் உணர்வு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அரசின் அத்து மீறலாக கருதப்படும்.
மாநிலங்களின் பங்கேற்பு மற்றும் ஒப்புதல் இல்லாமல் தனிநபர் சட் டங்களில் கொண்டு வரப்படும் எந்தவொரு சீர்திருத் தமும் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்தும். தனிநபர் சட்டங்கள் பல நூற் றாண்டுகளாக பரிணமித்துள்ளன. பல்வேறு சமூகங்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மதச் சூழல்களில் ஆழமாக வேரூன்றியுள்ளது. பொது சிவில் சட்டம் திணிப்பு காரணமாக அதன் தனித்துவம், மதிப்பு, நம்பிக் கைகள் செயலிழக்கும். சிறுபான்மையினர் உரிமைகள், பழங்குடி சமூகங் களின் பாதுகாப்பு, நடைமுறைகள், பழக்கவழக்கங்கள், அடையாளங் களைப் பொது சிவில் சட்டம் அழித்துவிடும். சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் உள்ள நாட்டில் பொது சிவில் சட்டம் சமூக பொரு ளாதார தாக்கங்களை உருவாக்கும்.
ஒரே நாடு ஒரே மொழி ஒரே சட்டம் என்று திணிப்பதைக் காட்டிலும் ஒற்றுமை உணர்வை வளர்ப்பதிலும், சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதிலும், மதங்களுக்கிடை யேயான சகோதரத்துவத்தை வலுப் படுத்துவதிலும், வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை உண்டாக்கு வதிலும் கவனம் செலுத்தினால் இந்தியா வெற்றி பெறுவது உறுதி. பொது சிவில் சட்டத்தை திரும்ப அனுப்பி வைத்துவிட்டு “இந்தி யாவை“ – அரியணை ஏற்றுவோம். இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் முஸ்லிம்கள் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் சையத் சதிக்குலி சிகாப் தங்கல், சட்டமன்ற உறுப்பினர் குன் ஹாலிகுட்டி மற்றும் முன்னணியினர் கலந்து கொண்டனர்.