சூரியனை ஆய்வு செய்யும் திட்டத்தில் அய்ரோப்பாவுடன் இணையும் இஸ்ரோ!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெங்களுரு, நவ.6 அய்ரோப்பிய ஒன்றியத் தின் சூரியனை ஆய்வு செய்யும் ப்ரோபா – 3 செயற் கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவ இருப்பதாக ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு செய்ய இருக்கும் அய்ரோப் பாவின் ப்ரோபா 3 செயற் கைக்கோள் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி – எக்ஸ்எல் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அய்ரோப்பாவுடன் இணைந்து இஸ்ரோ இந்த ஆய்வில் ஈடுபடவுள்ளது.

ப்ரோபா 3 திட்டத்தில் இரு செயற்கைக்கோள்கள் இணைந்து 144 மீட்டர் நீளத்தினாலான கரு வியை உருவாக்கி ஆய்வை மேற்கொள்ளும். இந்தக் கருவி சோலார் கரோனாகிராஃப் என அழைக்கப்படுகிறது. இது சூரியனின் நேரடி ஒளியைத் தடுத்து ஆய்வை மேற்கொள்ள தெளிவான பார்வையை வழங்கும்.உலகின் மிகத் துல்லியமான உருவாக்கத்தில் அமைக்கப் பட்ட விண்வெளி திட்ட மான இதன் மூலம் சூரியனின் வெளிப்புற அமைப்பை மிகத் துல்லியமாக ஆராய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

புதுடில்லியில் நடை பெற்ற விண்வெளி அறிவியல் மாநாட்டில் பேசிய ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங், ”சூரியனை ஆய்வு செய்ய அய்ரோப்பா ஒன்றியத்தின் செயற்கைக் கோளான ப்ரோபா 3 வருகிற டிசம்பர் மாதம் சிறீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும். 60 முதல் 70 ஆண்டுகாலமாக மறைமுகமாக செயல்பட்டு வந்த விண்வெளி ஆய்வுத் துறை தற்போதைய விண்வெளி கொள்கைகள் 2023 இன் காரணமாக பொதுத் துறைக்கு திறக்கப்பட்டுள்ளது. இது தொழில்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற் றங்களைக் கொண்டுவரும்.
இந்திய விண்வெளி மய்யமான ‘பாரதிய அந்தரிக்ஷா நிலையத்தை’ (பிஏஎஸ்) வருகிற 2035 ஆம் ஆண்டிற்குள் விண்வெளியில் நிறுவி, 2040 ஆம் ஆண்டுக்குள் முதல் இந்தியரை நிலவில் தரையிறக்கும் லட்சிய இலக்கை அடைவோம்.

நம் நாட்டில் கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளும் விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். வழிகாட்டுதல், செயற்கைக்கோள் புகைப் படங்கள், நிலப்பரப்பின் வரைபடங்களைக் காட்டுதல் என ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க விண்வெளித் துறையே உதவுகிறது.உலக விண்வெளிப் பொரு ளாதாரத்தில் இந்தியாவின் பங்கு வரும் ஆண்டுகளில் 2 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயரும்” என்று அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *