சரிவில் முக்கிய துறைகளின் உற்பத்தி கடந்த ஆண்டை விட 1.8% சுருங்கியது

2 Min Read

புதுடில்லி, நவ.6- நாட்டின் தொழில்துறை உற்பத்தியில் 40% பங்கு வகிக்கும் 8 முக்கிய துறைகளின் உற்பத்தி அளவு செப்டம்பரில் மிக மோசமான அளவில் சரிவடைந்து, கடந்த 10 மாதங்களில் முக்கிய தொழில்துறைகள் குறியீடு (ICI) 154.8 என்ற அளவை எட்டியுள்ளது.

இது ஆகஸ்ட் மாத அள வை விட 0.83% குறைவு ஆகும். ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தொழில்துறைகளின் உற்பத்தி 2% உயர்வைப் பதிவு செய்து வந்தது.

ஆனால், இது ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட 1.6% உற்பத்தி சுருக்கத்தி லிருந்து, நேர்மறையான திருப்பத்தைக் காட்டுகிறது. ஆனால் இது 36 மாதங்களில் முதல் உற்பத்தி சுருக்கமாகும்.

கட்டுமானம் தொடர்பான இரு முக்கிய துறைகளுக்கான முடிவு கள் கலப்பாக இருந்தன. அதே போல் எஃகு உற்பத்தி வளர்ச்சி செப்டம்பரில் கடந்த 33 மாதங்களின் குறைந்த அளவான 1.5% ஆக இருந்தது. அதே நேரத்தில் சிமெண்ட் உற்பத்தி 7.1% உயர்ந்து, கடந்த 6 மாதங்களில் மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்தது.

அக்யூட் ரேட்டிங்ஸ் தலைமை பொருளாதார நிபுணர் சுமன் சவுத்ரி கூறுகையில்,”2024-25இல் முக்கிய துறைகள் 4.5% முதல் 5% வரை வளர வாய்ப்புள்ளது. எனினும் கடந்த ஆண்டின் 7.6% வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு. இது தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை 5% ஆக குறைக்கும்” என அவர் கூறினார்.

ஆனால், அய்சிஆர்ஏ தலைமை பொருளாதார நிபுணர் அதிதி நாயர், “மின்சாரம் மற்றும் சுரங்க உற்பத்தியில் குறைந்த சரிவு, ஜிஎஸ்டி இ-வே (GST e-way) பில்களில் அதிக வளர்ச்சி, மற்றும் முந்தைய ஆண்டின் சாதகமான அடிப்படை காரணமாக செப்டம் பரில் தொழில்துறை உற்பத்தி 3% முதல் 5% வரை வளர்ந்திருக்க லாம்” என கணித்துள்ளார்.

மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் – 8 உள் கட்டமைப்பு துறைகளில் 5 துறைகள் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்தன – நிலக்கரி (9.8%), சிமெண்ட் (0.85%), சுத்திகரிப்பு பொருட் கள் (0.07%) ஆகிய மூன்று துறைகள் மட்டுமே ஆகஸ்ட் மாதத்தை விட அதிக உற்பத்தி யைப் பதிவு செய்துள்ளன.

மின் உற்பத்தி தொடர்ந்து இரண்டாவது மாதமாக சுருங்கி, செப்டம்பர் 2023அய் விட 0.5% குறைந்தது – கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து அய்ந்தாவது மாதமாக 3.9% சரிவைப் பதிவு செய்தது – இயற்கை எரிவாயு உற்பத்தி தொடர்ந்து மூன்றாவது மாதமாக 1.3% குறைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *