இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்களின் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Viduthalai
1 Min Read

‘இண்டியா டுடே’ ஆங்கில இதழின் மதிப்பீடு!

“இந்­தி­யா­வின் அதி­கார சபை” – டாப் 10
பட்­டி­ய­லில் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் 8ஆவது இடம் பெற்றுள்ளார்.
‘இண்­டியா டுடே’ இந்த நவம்­பர் மாத இத­ழில் “இந்­தி­யா­வின் அதி­கார சபை” என்ற தலைப்­பில் சக்­தி­வாய்ந்த மனி­தர்­கள் பட்­டி­யலை வெளி­யிட்­டுள்­ளது.
டாப் 10 பட்­டி­ய­லில், தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலினுக்கு 8ஆவது இடம் வழங்கப்­பட்­டுள்­ளது.
பிர­த­மர் மோடி, உள்­துறை அமைச்­சர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். தலை­வர் மோகன் பக­வத் என நீளும் இந்த பட்­டி­ய­லில் 5 மாநில முத­ல­மைச்­சர்­கள் மட்­டுமே இடம்­பெற்­றுள்­ள­னர்.
முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் இந்த பட்­டி­ய­லில் இடம்­ பெற்­ற­தற்­கான கார­ணம்?
 அடக்­க­மான போர்­வீ­ரன்
 தென் கோட்­டை­யைப் பிடித்து வைத்­தி­ருப்­ப­வர்.
 மொழித் தடை­யால் மு.க. ஸ்டாலினின் பேச்சு வடக்கு மாநி­லங்­களை அடை­யா­மல் இருக்­க­லாம், ஆனால் பூர்­வீக நில­மான தமிழ்­நாட்­டில் அவ­ருக்­குள்ள செல்­வாக்கு கார­ண­மாக அவ­ரின் குரல் டில்லி அதி­கா­ரத்­தின் செவியை எட்­டு­கி­றது.
மக்களவையில் தி.மு.­க.­வுக்கு 22 உறுப்பினர்கள், மாநிலங்களவையில் 10 உறுப்பினர்கள் மட்­டு­மின்றி, தமி­ழ்நாட்டின் 39 தொகு­தி­க­ளி­லும் இந்­தியா
கூட்­டணி 70% வாக்­கு­க­ளு­டன் வெற்றி வாகை சூடி­யது.
 எல்லா மாநி­லங்­க­ளி­லும் பாஜ­க­வுக்கு சில தொகு­தி­கள் கிடைத்த சூழ­லி­லும் தமிழ்­நாட்­டில் ஒரு இடம்­கூட கிடைக்­கா­மல் செய்­தது பாஜ­க­வுக்கு அதிக வருத்­தத்தை தந்­தது. எனவே, தென்­னிந்­தி­யா­வில் இந்­தியா கூட்­ட­ணிக்கு ஒரு முக்­கிய அம்­ச­மாக மு.க.ஸ்டாலின் எஃகு போல திகழ்­கி­றார்.
 2021ஆம் ஆண்­டில் மு.க.ஸ்டாலின் முத­ல­மைச்­சர் ஆன­தில் இருந்து, அவ­ரது தி.மு.க. அரசு 2030 ஆம் ஆண்­டுக்­குள் தமிழ்­நாட்டை ஒரு டிரில்­லி­யன் டாலர் பொரு­ளா­தா­ர­மாக மாற்­றும் இலக்கை நோக்கி செயல்­பட்டு வரு­கி­றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை­மை­யி­லான ஆட்­சி­யில் உல­கின் முன்­னணி நிறு­வ­னங்­க­ளான பார்ச்­சூன் 500 நிறு­வ­னங்­கள் உட்­பட 130 நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து ரூ.9.74 லட்­சம் கோடி முத­லீ­டு­களை ஈர்த்­துள்­ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *