தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (5.11.2024) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள், முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள், சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.