குஜராத்தில் நிலநடுக்கம்!

viduthalai
2 Min Read

அகமதாபாத், நவ. 5- குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் 3.11.2024 அன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படவில்லை என அந்த மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

கட்ச் மாவட்டத்தில் உள்ள லக்பத் பகுதிக்கு வடக்கு-வடகிழக்கில் 53 கி.மீ. தொலைவில் ஞாயிறு அன்று அதிகாலை 3.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 3.4 அலகுகளாக பதிவானது. முன்னதாக, கடந்த அக்.27-இல் குஜராத் மாநிலத்தில் உள்ள சவுராட்டிரா பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 3.7 அலகுகளாக பதிவானது.நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் மாநிலமாக குஜராத் உள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்திய 9 நிலநடுக்கங்கள் குஜராத்தில் ஏற்பட்டதாக அந்த மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2001-ஆம் ஆண்டு கட்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமே இந்தியாவில் ஏற்பட்ட மூன்றாவது மிகப்பெரிய மற்றும் அதிக பாதிப்பை ஏற்படுத்திய இரண்டாவது நிலநடுக்கமாகும். ரிக்டா் அளவுகோலில் 6.9 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த மாநிலமும் பாதிக்கப்பட்டது. இதில் 13,800 போ் உயிரிழந்ததோடு 1.67 லட்சம் போ் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

வட மாவட்டங்களில் நாளை முதல் கனமழை வானிலை ஆய்வு மய்யம் தகவல்

சென்னை, நவ.5- சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை (6.11.2024) முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் அறிவித்து இருக்கிறது. தமிழ் நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக் டோபர்) தொடங்கினாலும், பருவமழைக்கான முழுவதுமான கிழக்கு காற்று தற்போது தான் தென் இந்திய பகுதிகளில் பரவி உள்ளது. இதனால் வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய இருக்கிறது.

அதிலும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கீழ டுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. அதிலும் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக வட மாவட்டங்களில் மழை தீவிரம் அடைய இருக்கிறது. 6.11.2024 (புதன்கிழமை) அல்லது அதற்கு அடுத்த நாள் 7.11.2024 (வியாழக்கிழமை) வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் அறி வித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், சென்னை, காஞ்சீ புரம், திருவள்ளூர், செங்கல் பட்டு உள்ளிட்ட வட மாவட் டங்களில் நாளை முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு முன்னதாக இன்று (5.11.2024) காலையில் இருந்தே வட மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் நவம்பர் மாதத்தின் முதல் கனமழையை சென்னை உள்பட வடமாவட்டங்கள் பெற இருக்கின்றன. இந்த கனமழையால் அச்சப்பட தேவையில்லை என்றும், தாழ்வான பகுதிகளில் மட்டும் தண்ணீர் தேங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *