கல்லக்குறிச்சி கழக இளைஞரணி கலந்துரையாடலில் தீர்மானம்
கல்லக்குறிச்சி, நவ. 5- கல்லக்குறிச்சி மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட கழக தலைவர் கோ.சா.பாஸ்கர் அவருடைய அலுவலகத்தில் 2.11.24சனிக்கிழமை காலை 11மணியளவில் மாவட்ட கழக இளைஞரணி தலைவர் கொளத்தூர் கரிகாலன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட கழக தலைவர் கோ.சா.பாஸ்கர், மாவட்ட கழக செயலாளர் ச.சுந்தரராசன், மாவட்ட கழக துணைத் தலைவர் குழ.செல்வராசு ஆகியோர்கள் முன்னிலையில் மாநில கழக இளைஞரணி செயலாளர் நாகை நாத்திக பொன்முடி சிறப்புறையாற்ற மாவட்ட கழக இலக்கிய அணி தலைவர் பெ.செயராமன், நகர தலைவர் முத்துசாமி, மேலூர் கழக தலைவர் பழனிமுத்து, கடுவனூர் சண்முகம், மாவட்ட ப.க தலைவர் பெ.எழிலரசன், மாவட்ட ப.க செயலாளர் வீர.முருகேசன், மூரார் பாளையம் செல்வமணி மற்றும் கழக தோழர்கள் கலந்துகொண்டு கீழ்க் கண்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
உலக தலைவர் தத்துவ தலைவர் தந்தைபெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாள் மகிழ்வாக மாவட்ட இளைஞரணி சார்பில் நகரங்கள்,கிராமங்கள் முழுவதும் கிளைக்கழகங் கள் அமைத்து கழகக் கொடி ஏற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் தெருமுனைக்கூட்டங்கள் நடத்தி துண்டறிக்கை வழங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவ தும் இளைஞரணி அமைப்பை உருவாக்கி புதிய இளைஞர்களை இயக்கத்தில் சேர்ப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
உலகின் ஒரே பகுத் தறிவு நாளேடான விடு தலைக்கு இளைஞரணி சார்பில் அதிக அளவி லான சந்தாக்களை வழங்குவதென தீர்மானிக் கப்பட்டது.
நவம்பர்26இல் ஈரோட் டில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் மாவட்ட இளைஞரணி சார்பில் தனி வாகனத்தில் அதிக மாக இளைஞர்கள் பங்குபெற வேண்டுமாய் தீர்மானிக்கப்பட்டது.