புதுடில்லி, நவ.4 பல்கலைக்கழக மானியக் குழுவின் பெயரை தவறாகப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா் மனீஷ் ஆா்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு:
உரிய அனுமதி, அங்கீகாரம் பெறாமல் யுஜிசி-இன் இலச்சினையை பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தி வருவது கவனத்துக்கு வந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் பல் வேறு குழப்பத்துக்கு வழிவகுக்கிறது. யுஜிசி-இன் பெயா், இலச்சினை மற்றும் இணையதளத்தை பயன் படுத்த எவருக்கும் அனுமதி வழங்கவில்லை. இருந்தபோதிலும், சில தனியார் நிறுவனங்கள் யுஜிசி-இன் விவரங்களை தவறான ஆதாயங்களுக்காக பயன்படுத்து கின்றனா். எனவே, பொதுமக்கள் உள்பட அனைவரும் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த விவரங்களைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுஜிசி பெயரை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை
Leave a Comment