சென்னை, நவ.3- தமிழ்நாட்டில் தீபாவளியையொட்டி தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 873 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி என்ற பெயரால் வெடிகளை வெடிப்பதும், வெடி விபத்துகள் ஏற்படுவதும், அரசு சார்பில் நேரக்கட்டுப்பாட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், எச்சரிக்கைகள் அரசு சார்பில் வெளியிடப்பட்டு, மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், விதிகளை மீறி பட்டாசு வெடிப்பதும், விபத்துகள் நேர்வதும் தொடர்கின்றன.
தீபாவளியையொட்டி பட் டாசுகளை காலையில் 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் பட் டாசு வெடிக்க அந்தந்த மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தமிழ்நாட்டிலும் இந்த தடை அமல்படுத்தப்பட்டது. தடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.
சென்னையில் 347 பேர்
சென்னையில் பல்வேறு இடங்களிலும் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்களை கண்கா ணித்து நடவடிக்கை எடுப்ப தற்காக காவல்துறையினர் வலம் வந்தனர்.
நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்களுக்கு முதலில் எச்சரிக்கை விடுத்தனர். எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பாய்ந்தது. அதன்படி சென்னையில் மொத்தம் 347 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் தாம்பரத்தில் 67 பேர் மீதும்,ஆவடியில் 46 பேர் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு தீபாவளியின்போது நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் மட்டும் 554 பேர் மீது வழக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் கைது
நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மதுரை மாவட்டத்தில் 18பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் 13 பேர் மீது அந்தந்த பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். இதே போல் திருச்சி புறநகர் பகுதிகளில் 45 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கரூர் மாவட்டத்தில் 30 பேர் மீதும், தஞ்சை மாவட் டத்தில் 17 பேர் மீதும், நாகை மாவட்டத்தில் 7 பேர் மீதும், திருவாரூர் மாவட்டத்தில் 51 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர நீலகிரி மாவட்டத்தில் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 8 பேர் மீதும், நாமக்கல் மாவட்டத் தில் 35 பேர் மீதும் தர்மபுரி மாவட்டத்தில் 17 பேர் மீதும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
873 பேர் மீது வழக்கு
நெல்லை மாவட்டத்தில் 36 பேர் மீதும்,தூத்துக்குடி மாவட்டத்தில் 62 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட் டது. இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளியன்று நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீதும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 14 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் 873 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதே சமயம் காஞ்சிபுரம், கடலூர், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, குமரி, கோவை, தென்காசி மாவட்டங்களில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
புதுச்சேரி
புதுச்சேரி மாநிலத்தில் விதியை மீறி பட்டாசுகள் வெடித்த 65 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 6 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டது.
சென்னையில் தீபாவளியால் தீ விபத்துகள்
சென்னையில் தீபாவளியையொட்டி பட்டாசு வெடிக்கும் போது 48 இடங்களில் லேசான தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தீபாவளியின் போது எளிதில் தீ பிடிக்கும் இடங்களுக்கு அருகில் பட்டா சுகளை வெடிக்கக்கூடாது என தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வந்த னர். ஆனால் ஒருசிலர் கவனக் குறைவாக பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்படு வது தொடர் கதையாகி வரு கிறது. இதனை தடுக்க பல் வேறு விழிப்புணர்வுகளை தீயணைப்பு துறை ஏற்படுத்தி யது.
மேலும்,சென்னையில் உள்ள 43 தீயணைப்பு நிலை யங்களில் பணியாற்றும் 800 தீயணைப்பு வீரர்களும், கூடுத லாகவெளி மாவட்டங்களில் இருந்து 21 தீயணைப்பு வண் டிகளில் 300 பேரும் என 1,100 தீயணைப்பு வீரர்கள் தீ விபத்தை தடுக்கும் பணியில் இருந்தனர். குறிப்பாக, சென் னையில் கடந்த ஆண்டு பட் டாசு வெடித்து ஏற்பட்ட தீ விபத்தின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக 21 இடங்களில் தீய ணைப்பு வாகனங்கள் நிறுத் தப்பட்டிருந்தன.
இருப்பினும், சென்னையில் 48 இடங்களில் லேசான தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் உயிர் சேதமோ, பெரிய அளவில் பொருள் சேதமோ ஏற்பட வில்லை என தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரி வித்தார். சென்னையில் தீய ணைப்புத் துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட விழிப்பு ணர்வு மற்றும் தொடர்மழை காரணமாககடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீ விபத்து குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு 102 இடங்களில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு 48 இடங்களில் மட்டும் லேசான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதேபோல, தமிழ்நாடு முழுவதும் நடப்பு ஆண்டு 150 இடங்களில் பட் டாசுவெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.