கோவையில் நடைபெற்ற ‘அசுரர் நாள்’ விழா குடும்ப விழாவாகச் சிறப்பாக நடைபெற்றது

2 Min Read

கோவை, நவ. 3- கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 31.10.2024 அன்று காலை 11 மணி அளவில் அசுரர் நாள் விழா, குடும்ப விழாவாக சுந்தரா புரம் ராஜ முத்தையா நகரில் உள்ள தமிழ் முரசு (எ) தருமன் இல்லத்தில் மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலை மையில் நடைபெற்றது.
கொள்கை குடும்பம் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று தோழர் தருமன் உரையாற்றினார்.
நரகாசுரன் அவர்களுக்கு தோழர்கள் அனைவரும் எழுந்து நின்று வீரவணக்கம் செலுத்தினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற தோழர் கள் அனை வரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டார்.

அண்மையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட தோழர் த.க.யாழினி, மு.பு. அபினேஷ் ஆகியோர் தங்களை அறிமுகம் செய்து கொண்டு பெரியாரியல் கொள்கை விளக்கி தாங்கள் அடைந்த பயன்களை பட்டியிலிட்டு உரையாற்றினார்.
அதை தொடர்ந்து வருகை தந்த கழக குடும்பத்தினர் தாங்கள் பெரியாரால் அடைந்த பயன்கள் பகுத்தறிவு, சுயமரியாதை, ஒழுக்கம்,மனிதநேயம், சுய சிந்தனை சமுக நீதி போன்ற கொள்கைகளால் தாங்கள் அடைந்த பயன்களை பட் டியிலிட்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து பெரியாரியல் கொள்கைகளை விளக்கி மாவட்ட தலைவர் சந்திரசேகர் உரையாற்றினார். கோவையில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண் டும் குடும்ப விழா நடைபெற்று வந்தது. கரோனா காலகட்டத்தில் அந்த விழா தடைபட்டது.

இனி தொடர்ந்து குடும்ப விழா நடைபெறும் என அறிவித்தார் – தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற ஆசானூர் பெரியாரியல் பயிற்சி முகாம் குறித்தும் 91 வயதில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவதை எடுத்து கூறி இளைஞர்கள் ஆசிரியரிடன் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பெரியாரியல் பயிற்சி முகாமில் அனைவரும் பங் கேற்க வேண்டும் என்றும் உரையாற்றினார்.
மதியம் பங்கேற்ற அனை வருக்கும் மட்டன் பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது.
நிறைவாக குடும்ப விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் கவிதா தருமன் தங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *