ராஞ்சி, நவ. 3- ஜார்க்கண்ட்டுக்கான நிலக்கரி நிலுவைத்தொகையான ரூ.1.36 லட்சம் கோடியை வழங்குமாறு இருகரம் கூப்பி வேண்டுவதாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கோரிக்கை வைத்துள்ளார்.
ஜார்க்கண்டில் பிரச்சாரம்
ஜார்கண்ட் மாநிலம் ஏராளமான நிலக்கரி சுரங்கங்களை கொண்டுள்ளது. ஒன்றிய அரசின் ‘நிலக்கரி இந்தியா’ போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் ஜார்கண்டில் இருந்து நிலக்கரி வாங்குகின்றன.
ஆனால் இதற்கான தொகையில் பெருமளவுக்கு நிலுவை வைத்திருப்பதாக மாநில அரசு கூறியுள்ளது. குறிப்பாக ரூ.1.36 லட்சம் கோடி அளவுக்கு நிலக்கரி நிலுவை இருப்பதாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கூறியுள்ளார்.
இந்த தொகையை வழங்குமாறு ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வரும் அவர், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதி வருகிறார்.
இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஜார்கண்டில் இன்றும், நாளையும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர்.
இருகரம் கூப்பி வேண்டுகிறேன்
இவ்வாறு பிரசாரத்துக்கு வரும் இரு தலைவர்களும், ஜார்க்கண்டுக்கான நிலக் கரி நிலுவைத்தொகையை வழங்குமாறு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வேண் டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்,’பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஜார்கண்ட்டுக்கு வருகிறீர் கள். ஜார்கண்ட் மக்களுக்கு நிலக்கரி நிலுவைத் தொகையான ரூ.1.36 லட்சம் கோடியை உடனே வழங்குமாறு மீண்டும் ஒருமுறை இருகரம் கூப்பி வேண்டுகிறேன்’ என குறிப்பிட்டு உள்ளார்.
பிரதமருக்கு கடிதம்
அத்துடன் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு தான் எழுதியிருந்த கடிதத்தையும் அவர் இணைத்திருந்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது:- நிலக் கரி நிறுவனங்களில் இருந்து எங்களுக்கு ரூ.1.36 லட்சம் கோடி பாக்கி இருக்கிறது. இது மாநில வளர்ச்சிப்பாதையில் தடையாக இருப்பதால், இந்த முக்கிய பிரச்சினை குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
மாநிலங்களின் சுரங்கம் மற்றும் உரிமைத்தொகையை வசூலிக்க அந்தந்த மாநில அரசுக்கு உரிமை உண்டு என சமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதி கள் அமர்வு தீர்ப்பு அளித்தது.
இவ்வாறு சட்டம் மற்றும் நீதித்துறை தீர்ப்புகள் இருந்தபோதிலும், நிலக்கரி நிறுவனங்கள் பணம் செலுத்துவதில்லை. இது குறித்து உங்கள் அலுவலகம், நிதி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் உள்பட பல்வேறு மன்றங்களில் கோரிக்கை வைத்தும் இதுவரை இந்த நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.
திட்டங்கள் முடக்கம்
ஜார்கண்ட் வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலம் ஆகும். எங்களுக்கு உரிமையான இந்த தொகை நிலுவையில் உள்ளதால் மாநிலத்தில் ஏராளமான சமூக பொரு ளாதார திட்டங்கள் பாதிக்கப்பட்டு உள் ளன. மாநிலத்தின் கல்வி, சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம் பாடு, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட பல் வேறு சமூகத்துறை திட்டங்கள் நிதிப் பற்றாக்குறையால் முடங்கி உள்ளன.
எங்களின் நிலுவைத்தொகையான ரூ.1.36 லட்சம் கோடியை பயன்படுத்தி ஜார்கண்ட் மாநிலத்தை புதிய வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வோம்.
எனவே இந்த நிலுவைத்தொகையை உடனே வழங்குமாறு கேட்டுக்கொள்கி றேன். இவ்வாறு ஹேமந்த் சோரன் அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.