2.11.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
கேரளாவில் பாஜகவினர் தொடர்புடையதாக கருதப்படும் கொடக்காரா ஹவாலா வழக்கை மீண்டும் விசாரிக்க பினராயி விஜயன் அரசு முடிவு.
தெலங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு முதல் கட்டப் பணிகள் வீடு வீடாக கதவுகளில் ஸ்டிக்கர் ஒட்டித் தொடக்கம்; தொடக்கப் பள்ளியின் 48,000 ஆசிரியர்கள் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
தி டெலிகிராப்
டிரம்ப் ‘நிலையற்றவர்’, ‘பழிவாங்குவதில் வெறி கொண்டவர்’, ‘கட்டுப்படுத்தப்படாத அதிகாரத்தை விரும்புபவர்’, என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் காட்டம். சமீபத்திய சி.என்.என். கருத்துக் கணிப்புகள் மிச்சிகன் மற்றும் விஸ்கான்சினில் ஹாரிஸுக்கு ஒரு குறுகிய ஆதாயம் இருப்பதைக் காட்டியது, அதே நேரத்தில் அவரும் டிரம்பும் பென்சில்வேனியாவில் சமநிலையில் உள்ளனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா
மக்களுக்கு அளித்த காங்கிரசின் “உண்மையற்ற” மற்றும் “போலி” வாக்குறுதிகள் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கும் வகையில், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அரசாங்கம் ஏமாற்றும் தந்திரங்களில் ஈடுபடுவதாகவும், “மலிவான PR ஸ்டண்ட்களை” பிரதமர் மோடி பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.-
குடந்தை கருணா