நாகர்கோவில், நவ. 2- கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாட்டுடன் இணைந்த நாளைமுன்னிட்டு, அரசின் சார்பில் நேசமணியின் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா நேற்று (1.11.2024) மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருவிதாங்கூா் சமஸ்தானத்துடன் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் பல்வேறு போராட்டங்களுக்கு பின்னா் கடந்த 1956 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 1 ஆம் தேதி தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டது. இதை கொண்டாடும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாகா்கோவில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள நேசமணி நினைவு மணிமண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், மக்களவை உறுப்பினர் வ.விஜய்வசந்த், சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, மாலை அணிவித்தும், மலா்கள் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயா் மேரிபிரின்சிலதா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜான்ஜெகத்பிரைட், மாநகராட்சி மண்டல தலைவா் ஜவகா், கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், அண்ணா பேருந்து நிலையம் முன்பு உள்ள நேசமணி சிலைக்கு மக்களவை உறுப்பினா் வ.விஜய்வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டுடன் குமரி இணைந்த நாள் நேசமணி சிலைக்கு ஆட்சியர் மரியாதை
Leave a comment