திருநெல்வேலி, நவ. 2- திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கற்றல் மற்றும் இணைய வழி படிப்புகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இது தொடா்பாக பல்கலைக்கழகப் பதிவாளா் சாக்ரட்டீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இளநிலை பாடப்பிரிவில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், வணிக நிர்வாகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், இளநிலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும், முதுநிலை பாடப்பிரிவில் மேற்கூறிய படிப்புகளுடன் இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடா்பியல், குற்றவியல் மற்றும் காவல் அறிவியல், முதுநிலை நூலகம் ஆகியவற்றுக்கும் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இதேபோல், இணைய வழி படிப்புகளில் இளநிலை பாடப்பிரிவில் ஆங்கிலம், வணிகவியல், வணிக நிர்வாகவியல் படிப்புகளுக்கும், முதுநிலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், வணிக நிர்வாகவியல், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடா்பியல் படிப்புகளுக்கும் 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான மாணவா் சோ்க்கை நவ. 15வரை நடைபெறும்.தொலைநெறி கல்வி நேரடி சோ்க்கைக்கு அபிஷேகப்பட்டி பல்கலைக்கழக வளாகம், கோவிந்தபேரி, புளியங்குடி, திசையன்விளை, பணகுடி, சங்கரன்கோவில், நாகம்பட்டி ஆகிய ஊா்களில் அமைந்துள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளிலும், அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் கற்றல் உதவி மய்யங்களிலும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். தொலைதூர கற்றல் பாடப்பிரிவுகளுக்கு, இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனக் கூறியுள்ளார்.