நம் நாட்டில் பெண் தொழிலாளர்கள் பணி வாழ்வில் கடும் தாக்கு தல்கள் நிகழ்ந்து கொண்டி ருக்கின்றன. ஒன்றிய அமைச்சர்கள் தாமும் இதற்கு சாட்சி கூறுகின்றனர். சமீப காலமாக, ஓர் அதிர்ச்சிகரமான நிகழ்வு இந்த நிலவரத்தை சுட்டிக்காட்டுகிறது.
சி.ஏ. பட்டதாரியான அன்னா செபாஸ்டியன் – ஓர் இளம் பெண்மணி. தனது மேலாண்மைக் கணக்கு தணிக்கைப் பணிக்காக புனேவில் சேர்ந்தார். நான்கு மாதங்கள் கடுமையாக உழைத்தார். ஆனால் அதிக வேலை மற்றும் மன அழுத்தம் அவரைப் பாதித்தது. இறுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இல்லாமல் அவர் உயிரை இழந்தார். தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்கள் நிலை மிகவும் கவலைக்குரியது. நம் நாட்டில் அறிவியல் மற்றும் தொடர்பு வல்லுநர்களில் வெறும் 8.5% மட்டுமே பெண்கள் ஆவர். பன்னாட்டு மட்டத்தில் 145 நாடுகளுக்கிடையில் தொழில்நுட்ப துறையில் பெண் பிரதிநிதித்துவத்தில் இந்தியா 130ஆவது இடத்தில் உள்ளது. இளம் பெண் தொழிலாளர்கள் வாரத்திற்கு சராசரி 57 மணி நேரம் பணி புரிகின்றனர் – அதாவது ஒரு நாளைக்கு 11 மணி நேரம். இதை ஜெர்மனி அல்லது ரஷ்யாவின் தரங்களுடன் ஒப்பிடும்பொழுது இது மிக அதிகமாகும். வீட்டிலிருந்து வேலை செய்யும் கட்டத்தில் பெண்கள் மேலும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
வீட்டுக்குள் மட்டுமல்ல, வேலைக்கும் அப்பாற்பட்ட பல பொறுப்புகளை சமாளிக்க வேண்டி யுள்ளது. அதிக வேலை நேரத்தின் தாக்கம் மிகவும் கவலைக்குரியது. தூக்கக்குறைவு, மன அழுத்தம், உடல்நலப் பிரச்சினைகள் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் மீது அளவுக்கு மீறிய அழுத்தம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். பெண் தொழிலாளர்கள் மீதான சமூகப் பொறுப்பு மேலும் அவசியமாகிறது. இந்திய சமுதாயம் பெண் தொழி லாளர்கள் நலனுக்கு மிகுந்த கவனம் செலுத்தி, அவர்களின் பணி வாழ்வில் சமநிலையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
1. பெண் தொழிலாளர்கள் பங்கு: அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையில் 8.5% பெண்கள்- தகவல் தொடர்புத் துறையில் 20% பெண்கள்.
2. பணி நேர விவரங்கள்:- 24 வயது வரையிலான பெண்கள் வாரத்துக்கு சராசரி 57 மணி நேரம் பணி – 5 நாள் பணி: ஒரு நாளைக்கு 11 மணி நேரம் – 6 நாள் பணி : ஒரு நாளைக்கு சராசரி 9 மணி நேரம்.
3. பன்னாட்டு ஒப்பீடு:- ஜெர்மனி: வாரத்துக்கு 32 மணி நேரம் – ரஷ்யா: வாரத்துக்கு 40 மணி நேரம்- இந்தியா: வாரத்துக்கு 55 மணி நேரம்.
4. பன்னாட்டு தரவு:- 145 நாடுகளில் தொழில்நுட்பத் துறைப் பெண் பிரதிநிதித்துவத்தில் இந்தியா 130ஆவது இடம்.
5. வீட்டு வேலை நேரம்:- பணிக்குச் செல்லும் பெண்கள் வீட்டு வேலைக்கு சராசரி 4 மணி நேரம்- திருமணமான ஆண்கள் வீட்டு வேலைக்கு 2 மணி நேரம்.