சென்னை, நவ.2 செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை ரூ.22.10 கோடி மதிப்பில் சீரமைக்க தமிழ்நாடு அரசு முடி வெடுத்துள்ளது. சென்னைக்கு முக்கிய குடிநீா் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. 6,300 ஏக்கா் பரப்பளவு மற்றும் 24 அடி உயரம் கொண்ட இந்த ஏரியில் 3,645 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.
கடந்தாண்டு வங்கக் கடலில் உருவான ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சேதமடைந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை ரூ.22.10 கோடி மதிப்பில் சீரமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. இதேபோன்று, பூண்டி ஏரி மற்றும் புழல் ஏரியில் உள்ள கட்டுப்பாட்டு அறைகள், திருவள்ளூரில் உள்ள பேரிடா் மேலாண்மை மய்யம், சேப்பாக்கத்தில் அமைந்துள்ள மேற்பார்வைக் கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்தல் மய்யம், மாநில பேரிடா் மீட்பு மய்யம் ஆகியவையும் ரூ.13.90 கோடியில் மேம்படுத்தப்படவுள்ளது.
இந்த பணிகளுக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்ட நிலையில், ஒப்பந்தப் புள்ளிகளை நவ.11-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். அவை பரிசீலனை செய்யப்பட்டு நவ.12-இல் தகுதியானவா்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பிறகு ஒப்பந்ததாரா்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.