மும்பை டாடா நினைவு பிரிஜ்கேண்டி மருத்துவமனை முன்பு ஏழைகளுக்கு பொதுநல அமைப்பு என்ற பெயரில் சில காவி உடை அணிந்த நபர்கள் உணவு கொடுத்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் கணவரை கவனித்துக்கொண்டு இருந்த பெண் ஒருவர் உணவு கேட்டு வந்தார். அனைவருக்கும் சாப்பாடு கொடுத்த அந்த காவி உடை அணிந்த சாமியார் முஸ்லீம் பெண்ணிற்கு மட்டும் உணவு கொடுக்க வில்லை.
அவர் மீண்டும் கேட்ட போது நீ 3 முறை ஜெய் சிறீராம் சொல்லி விட்டு உணவை வாங்கிக் கொள் என்று கூறிவிட்டார். அவர் முன்பே காரில் வந்து இறங்கிய சிலருக்கும் அந்த சாமியார் கூட்டம் உணவு கொடுத்தது. ஆனால் அந்த ஏழை இஸ்லாமியர் போன்று தோற்றமளிக்கும் பெண்ணிற்கு உணவு கொடுக்கவே இல்லை.
இது தொடர்பாக கேட்டபோது பசிக்கிறது என்றால் ஜெய் சிறீராம் சொல்லிவிட்டு உணவை வாங்கலாமே – அப்படி என்ன திமிர் அந்த பெண்ணிற்கு என்று கேட்டு காட்சிப் பதிவு எடுத்தவரையும் மிரட்டுகிறார் அந்தச் சாமியார்.