கஞ்சா அடிப்பதுதான் சந்நியாசமா?

viduthalai
3 Min Read

சந்நியாசம் என்ற பெயரில் சிறுவயதிலேயே கஞ்சாவிற்கு அடிமையான சிறுமி
அவரோடு பாலியல் உறவுகொண்ட 40க்கும் மேற்பட்டோருக்கு எச்.அய்.வி. தொற்று

அரித்துவார், நவ.1 போதைக்காக சாமியாராக வேடம் போட்டு இமயமலையின் அடிவாரத்தில் வயது வரம்பில்லாமல் சுற்றுபவர்கள் ஏராளம். பல வெளிநாட்டு நபர்களும் இதில் அடங்கும். இதன்படி எந்த மாநிலம் என்று தெரியாத 17 வயது சிறுமி பல ஆண்டுகளாக போதைக்கு அடிமையாக சாமி யாரிணி வேட்ம போட்டு உத்தரா கண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் போதையை பயன்படுத் திக் கொண்டு திரிந்துள்ளார்.

இவரிடம் பல இளைஞர்கள் பாலியல் உறவுகொண்டிருந்தனர்.

இந்த நிலையில் சில வெளி நாட்டினரோடு இவர் உறவுகொண்ட தால் இவருக்கு எச்.அய்.வி. தொற்று ஏற்பட்டது.
அதன் பிறகு அந்த 17 வயது சிறுமியோடு உத்தராகண்டில் உள்ள பல இளைஞர்கள் பாலியல் உறவு கொண்டனர். குறிப்பாக அமாவாசை போன்ற நாட்களில் பரிகார பூஜை என்ற பெயரில் சிறுமிகளோடு பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் கொடூர வழக்கம் இன்றும் உண்டு. இதன் படி இந்தச் சிறுமியோடு 40 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாலியல் உறவு கொண்டனர்.

இதுவரை சோதனை செய்த 30 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு எச்அய்வி தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் பரிகாரம் என்ற பெயரில் சிறுமியோடு பாலியல் உறவு வைத்துகொண்ட பிறகு வீட்டில் பார்த்த பெண்ணோடு திருமணம் செய்துள்ளனர். இதனால், அவர்களது துணைவியாருக்கும் இந்த தொற்று பாதிப்பு ஏற்பட் டிருக்கிறது.
அச்சிறுமியோடு எத்தனை பேர் இவ்வுறவில் ஈடுபட்டனர். என்று காவல்துறை விசாரித்து வருகின்றனர். அச்சிறுமி போதையில் இருந்தபோது பாலியல் உறவு நடந்துள்ளதால் அச்சிறுமியால் சரியான எண்ணிக்கையைக் கூறமுடியவில்லை. இருப்பினும் சுமார் 40 க்கும் மேற்பட்டவர்கள் என்று சிறுமி கூறியுள்ளார். ஆனால் அச்சிறுமி நீண்ட நாட் களாக அரித்துவார், உத்தரகாசி, தெகராடூன் உள்ளிட்ட நகரங்களில் சுற்றித்திரிந்துள்ளார். அப்போது இந்த மோசமான நிகழ்வுகள் திரும்பவும் நடந்துள்ளன. சில சுற்றுலாப் பயணிகளும் போதை மருந்து வாங்கிக் கொடுத்து பாலியல் உறவுகொண்டுள்ளனர். ஆகையால் சரியான எண் ணிக்கை தெரியாமலும், சுற்றுலா சென்று அச்சிறுமியோடு உறவு கொண்டவர்கள் எந்தெந்த மாநி லத்தவர்கள் என்று தெரியாமலும், அவர்கள் மூலம் எத்தனை பேருக்கு பரவி உள்ளது என்று தெரி யாமலும் விசாரணையை எப்படி கொண்டு செல்வது என்றபடி திணறிவருகின்றனர்

உலகில் மிகவும் கொடிய தொற்று பாதிப்பு எச்அய்விதான். இதற்கு இப்போதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இந்த தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் உயிரிழப்பதை தடுக்க முடியாமல் போய் விடுகிறது. . இருப்பினும், எச்அய்வி உடன் வாழ்வது என்பது, மிகப்பெரிய போராட்டம்தான். இப்படி இருக்கையில், உத்தராகண்ட் மாநிலத்தில், போதைக்கு அடிமையான சாமியாரிணி சிறுமியோடு எத்தனை பேர் உறவு வைத்திருந்தனர் என்று எண்ணிக்கை தெரியாத நிலையில் தற்போது வரை 30 க்கும் மேற்பட்டோர் சோதனையில் உறுதியாகி உள்ளது மேலும் பலருக்கு சோதனை நடந்துவருகிறது. தற்போது அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி மருத்துவர்கள், “இந்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 பேர் எச்அய்வி தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இந்த ஆண்டு 45 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சிறுமி ஹெராயின் போதைக்கு அடிமையாகியிருந்திருக்கிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்குதான் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் நோய்வாய்ப்பட தொடங்கிய உடன் நாங்கள் உடனடியாக சோதனை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தொடங்கினோம். ஆனால் சோகம் என்னவெனில், சில இளைஞர்களுக்கு திருமண மாகி உள்ளது. அவர்களின் மனைவியரும்கூட இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று கூறியுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *