புதுடில்லி, அக். 31- தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
அரசுமுறைப் பயணமாக வருவதை தனிப்பட்ட முறையிலான பிரச்சாரமாக மாற்றுவதாகவும், அரசு இயந்திரங்களை தங்கள் கட்சியின் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவதாகவும் திரிணமூல் குற்றம் சாட்டியுள்ளது.
மேற்கு வங்கத்தில் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஒன்றிய உள் துறை அமைச்சர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு 24 பர்கானா மாவட்டத்துக்குட்பட்ட ஹரோவா மற்றும் நைஹாதி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. பர்கானா மாவட்டத்தில் பெட்ராபோல் பகுதியில் அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமித் ஷா அரசியல் சாயம் பூசியுள்ளார்.
அரசு சார்ந்த நிகழ்வுகளுக்கும் தேர்தல் பணிகளுக்கும் இடையே வேறுபாட்டை கடைப் பிடிக்கிறேன் எனக்கூறும் ஒன்றிய உள்துறை அமைச்சரின் நோக்கங்கள் மீது கடுமையான சந்தேகங்கள் எழுகிறது. மேலும், அரசு இயந்திரங்களை தங்கள் கட்சியின் தனிப்பட்ட பிசாரத்துக்குப் பயன்படுத்துகிறார் எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் வழிகாட்டுகிறது!
டோக்கியோ, அக்.31- ஜப்பானில் அலுவலக வாகன நிறுத்தம் தொடர்பான ஒரு விதி, அவர்கள் ஏன் முன்னேறி இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. அலுவலகத்துக்கு பணியாளர்கள், வேலை நேரத்துக்கு முன்பே வந்தால், அவர்கள் தங்கள் வாகனத்தை வாகன நிறுத்தும் இடத்தில் தொலைவில் நிறுத்த வேண்டும்.
ஏன் தெரியுமா? தாமதமாக வரும் பணியாளர்கள், வாகன நிறுத்தும் இடத்தில் முன்புறம் காலியாக உள்ள இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, நேரத்துக்கு பணிக்கு வர இந்த ஏற்பாடாம்.