புதுடில்லி, அக்.31 மக்கள்தொகை கணக் கெடுப்புடன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி னரின் (ஓபிசி) கணக் கெடுப்பையும் ஒன்றிய அரசு மேற் கொள்ள வேண்டும் என்று தெலங்கானா காங்கிரஸ் தீா்மானம் நிறைவேற்றி யுள்ளது.
தெலங்கானா தலைநகா் அய்தராபாதில் மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்ற காங்கிரஸ் கூட்டம் நேற்று (30.10.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஓபிசி கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டம் தொடா் பாக தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவா் மகேஷ் குமார் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மாநில அரசின் விரிவான சமூக, கல்வி, பொருளாதார, வேலைவாய்ப்பு, அர சியல் மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது.
மக்கள்தொகை கணக் கெடுப்புடன் தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினா் கணக்கெடுப்பும் மேற் கொள்ளப்படும். அத்துடன் ஓபிசி கணக் கெடுப்பையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான உத்தரவுகளை ஒன்றிய அரசு உடனடி யாகப் பிறப்பிக்க வேண்டும்’ என்றார்.
கூட்டத்தில் நிறைவேறப் பட்ட தீா்மா னம் மாநில அரசு சார்பில் ஒன்றிய அர சுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.