புதுடில்லி, அக். 30–- டில்லி வழக்குரைஞா் பட்டியலில் இருந்து 107 போலி வழக்குரைஞா்களை இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் (பிசிஅய்) நீக்கியுள்ளது.
இதுகுறித்து பிசிஅய் (பார் கவுன்சில்) வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘வழக்குரைஞா் சமூகத்தில் ஒருமைப்பாடு மற்றும் தொழில்முறையை மேம்படுத்தும் நோக்கிலும், வழக்குரைஞா் சமூகம் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாது காக்கும் வகையிலும், வழக்குரைஞா்களின் பணி செயல்பாடுகள் மற்றும் சான்றிதழ்களை ஆய்வு செய்து, போலி வழக்குரைஞா்கள் நீக்கும் நடவடிக்கை தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி வரை ஆயிரக்கணக்கான போலி வழக்குரைஞா்கள் கண்டறியப்பட்ட நீக்கப்பட்டுள்ளனா். டில்லியில் இருந்து மட்டும் கடந்த 2019 முதல் 2024-ஆம் ஆண்டு அக்டோபா் வரை 107 போலி வழக்குரைஞா்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டனா்.