வடக்குத்து, அக். 30- வடக்குத்து பெரியார் படிப்பகத்தில் 95ஆவது நிகழ்ச்சி கிளைத்தலைவர் தங்க பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி செயலாளர் டிஜிட்டல் ராமநாதன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் கோ.வேலு, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இரா.பெரியார் செல்வம், மாவட்ட வீர விளையாட்டு கழக தலைவர் இரா.மாணிக்கவேல் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். மாவட்ட செயலாளர் கவிஞர் க.எழிலேந்தி சிந்துவெளி முதல் கீழடி வரை ஆரிய சூழ்ச்சி எனும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.
நிகழ்வில் வடலூர் இரா.குணசேகரன், நா.முருகன், திராவிட மணி ரங்கசாமி, பழனிவேல், சந்திரமோகன், சுமலதா, அறிவுபொன்னி, ஆதவன், செல்வராஜ், கோபால், ஸ்டாலின், தமிழ்மணி, அன்புச்செல்வன், நெய்வேலி பாவேந்தர் விரும்பி ஆகியோர் கலந்து கொண்டனர். கிளை செயலாளர் நூலகர் இரா கண்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.