சென்னை, ஜூலை 29- காயர் பித் மற்றும் பிற தென்னை நார் தொழில் நிறுவனங்களின் கோரிக் கைகளை பரிசீலிக்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில்களை வெள்ளை வகையிலிருந்து ஆரஞ்சு வகையாக மறுவகைப்படுத்தியது தொடர்பாக பல்வேறு தென்னை நார்த் தொழில் சார்ந்த சங்கங் களின் கோரிக்கைகள் அரசுக்கு பெறப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டி லுள்ள தென்னை சார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியிலும் நீடித்த நிலைத் தன்மையினை உறுதி செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு ‘தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம்’ என்ற நிறுவனம் ஒன்றினை துவக்கி மதிப்புக் கூட்டப்பட்டுள்ள பொருட் கள் உற்பத்தியினை அதிகரிக்கவும் உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்பினை அதிகரிக்கவும் பல் வேறு முன்னெடுப்புகளை மேற் கொண்டுள்ளது. இதன் மூலம் நம் மாநிலத்தில் உள்ள தென்னை விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும்.
தமிழ் நாட்டில் சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை நார் மற்றும் காயர் பித் உள்ளிட்ட தென்னைசார் தொழில் நிறுவனங் கள் இயங்கி வருகின்றன. பெருமள வில் பெண்களுக்கு வேலை வாய்ப் பினை வழங்குவதுடன் மொத் தத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற வேலை வாய்ப்புகளை வழங்கி வரும் இந் நிறுவனங்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு மிகுந்த கனிவுடன் பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில் இந்த கோரிக்கை குறித்து அனைத்து தரப்பினருட னும் கலந்தாலோசித்து, இப்பொருள் குறித்து விரிவாக ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைக்க உயர்மட்ட வல்லுநர் குழுவை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இம்முயற்சி சுற்றுச்சூழலுக்கு உகந்தவகையிலும் அதே சமயம் இந்நிறுவனங்கள் நிலைத்தன்மை யுடன் இயங்கிடவும் வழி வகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.