புதுடில்லி, அக். 29 – மோடி பிரத மரான பிறகு நாட்டில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. ஒரே ஆண்டில் நாடு முழுவதும் கிறிஸ்த வர்களுக்கு எதிராக 585 தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில், இந்த தாக்குதலை கண்டித்தும், மோடி அரசுக்கு எதிராகவும் டில்லி ஜந்தர் மந்தரில் 26.10.2024 அன்று பேரணியுடன் நாடு முழுவதிலும் இருந்து கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திருச்சபை தலைவர்கள் போரட்டத்தில் கலந்து கொண்டனர். டில்லி பேராயர் அனில் குடோ, டாக்டர். பால் ஸ்வரூப், ரெவ். திமோதி, டாக்டர். மைக்கேல் வில்லியம்ஸ், மீனாட்சி சிங் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.
மோடி அரசுக்கு கண்டனம்
“மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை யின் போது 200க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் அழிக்கப்பட்டன. மணிப்பூரைப் போலவே பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு, கிறிஸ்தவர்களுக்கான அரசியல் சாசன உரிமைகள் பறிக்கப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே ஆண்டில் கிறிஸ் தவர்களுக்கு எதிராக 585 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மதமாற்றத் தடைச்சட்டங்கள் என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்படுகின்றனர். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் வி.எச்.பி. உள்ளிட்டவைகள் கிறிஸ்தவர்களின் செயல்பாடுகளை தடுக்க முயற்சிக்கிறது. நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நீதி இல்லாத சூழல் உள்ளது” என போராட்டத்தில் கிறிஸ்தவ தலைவர்கள் உரையாற்றினர்.
மோடி பிரதமர் ஆன
பின்பே தாக்குதல் அதிகரிப்பு
கிறிஸ்தவ தலைவர் ஏ.சி.மைக்கேல் கூறுகையில், “2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற நாளிலிருந்து இன்று வரை கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் கடுமையாக அதிகரித்து வரு கிறது. அதாவது 2014ஆம் ஆண்டுக்குப் பின் இந்த நாட்டில் வாழ்வது கடின மாகிவிட்டது என்பதை கிறிஸ்தவ சமூகம் உணர்ந்து விட்டது. 2014இல் நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மீது 100க்கும் குறைவான அளவிலேயே தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. 2015இல் 200 தாக்குதல் சம்பவங் களும், 2016இல் 300 தாக்குதல் சம்பவங் களாக உயர்ந்தன. அதன்பின் 400, 500 என கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து, கடந்த 2023இல் 700க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் பதிவாகி யுள்ளன. இது கிறிஸ்தவர்களுக்கு மட்டு மின்றி நாட்டுக்கு மிகவும் ஆபத்தான வளர்ச்சியாகும்” என அவர் கூறினார்.
மாதத்திற்கு 61 தாக்குதல் சம்பவங்கள் : யுசிஎப் தகவல்
யுனைடெட் கிறிஸ்டியன் போரம் (யுசிஎப்) தொகுத்த தரவுகளில், “2023ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 733 வன்முறை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது சராசரியாக மாதத்திற்கு 61 தாக்குதல் சம்பவங் கள் நிகழ்ந்துள்ளன. அதே போல 2024 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரை 9 மாதங்களில் 585 சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்த தாக்குதல் அனைத்தும் கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கையை கடைப்பிடிக்கும் மற்றவர் களை குறி வைத்து நிகழ்த்தப்பட்டதாகும். குறிப்பாக மணிப்பூரில் 200 தேவா லயங்கள் அழிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பாக பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சிறுபான்மை ஆணையங்களுக்கு பல முறை மனுக்கள் அளித்தும் எந்த அர்த்தமுள்ள பதிலையும் இதுவரை அளிக்கவில்லை.
மேலும் நடவடிக்கை தொடர்பாக சிறு வார்த்தைக் கூட பேச வில்லை” என அதில் கூறப்பட்டுள்ளது.