* தி.மு.க. ஒன்றிய செயலாளர் எம். சிவபாலன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து கலைஞர் உருவச் சிலையினை தமிழர் தலைவரிடம் வழங்கினார். * பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை கழகப் பொறுப்பாளர்கள், பொது மக்கள் அன்போடு வரவேற்றனர். (27.10.2024)
![சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – சாமி கைவல்யம் தொண்டறச் சிறப்பு விழாவில் தமிழர் தலைவர்.... [27.10.2024] திராவிடர் கழகம்](https://viduthalai.in/wp-content/uploads/2024/10/15-32.jpg)
சுயமரியாைத இயக்க நூற்றாண்டு விழா, சாமி கைவல்யம் தொண்டறச் சிறப்பு விழா கல்வெட்டினை தமிழர் தலைவர் திறந்து வைத்து கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். (27.10.2024)
![சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – சாமி கைவல்யம் தொண்டறச் சிறப்பு விழாவில் தமிழர் தலைவர்.... [27.10.2024] திராவிடர் கழகம்](https://viduthalai.in/wp-content/uploads/2024/10/16-34-scaled.jpg)
*சாமி கைவல்யம் குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். *நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர்.
![சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – சாமி கைவல்யம் தொண்டறச் சிறப்பு விழாவில் தமிழர் தலைவர்.... [27.10.2024] திராவிடர் கழகம்](https://viduthalai.in/wp-content/uploads/2024/10/17-30.jpg)
கோபி கழக மாவட்டம் தூக்கநாய்க்கன்பாளையம் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – சாமி கைவல்யம் தொண்டறச் சிறப்பு விழா பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுயமரியாதைச் சுடரொளி பங்களாபுதூர் மாரண்ணன் (தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டராக இருந்து செயல்பட்டவர்) அவர்களது இல்லத்திற்கு மாலை 6.00 மணியளவில் சென்று குடும்ப உறுப்பினர்களான அவரது மருமகள் ஜானகியம்மாள் பேத்திகள் அறிவுச்செல்வி, கோமதி, செல்வகுமார்ஆகியோரைச் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களது குடும்பம் சார்பாக ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து வரவேற்றனர். தமிழர் தலைவரும் மாரண்ணன் குடும்பத்தார் அனைவருக்கும் பயனாடை அணிவித்தார். பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். மாவட்ட தி.மு.க செயலாளர் என். நல்லசிவம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மூத்த தி.மு.க. உறுப்பினர்
டி.கே. சுப்பிரமணியம், மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் மு. சென்னியப்பன், சத்தியமங்கலம் நகராட்சித்தலைவர் ஜானகி ராமசாமி,காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் எஸ்.பி.சரவணன், மாவட்ட தி.மு.க பொருளாளர் ஜம்பு (எ) சண்முகசுந்தரம், தி.மு.க ஒன்றிய செயலாளர் சிவபாலன் ஆகியோர் உடன் இருந்தனர். (27.10.2024)
