கோபிசெட்டிபாளையம் கழக மாவட்டம் சார்பில் சத்தியமங்கலம், தாளவாடி வட்டம் ஆசனூரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை

viduthalai
2 Min Read

 சிறப்பாக திட்டமிட்டு நடத்திய
அனைவருக்கும் பாராட்டுக்கள்-நன்றி

சத்தியமங்கலம் தாளவாடி வனப்பகுதியான பழையஆசனூரில் 2024 அக்டோபர் 26, 27 சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மிகச் சிறப்பாக நடைபெற்றது 132 இருபால் மாணவர்கள் பங்கேற்று பயன் பெற்றனர் நூற்றுக்கு மேற்பட்ட பார்வையாளர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். பயிற்சிப் பட்டறை நடைபெற்ற அரங்கம், தங்குமிடம் , உணவு அரங்கம் அனைத்தும் மிக சிறப்பான முறையில் அமைந்திருந்தன. பெரியார் என்பது வாழ்வியல், பெரியாரே நம்மை உயர்த்தியவர், பெரியார் அனைவருக்கும் உரியார் என்பதை நன்கு உணர்ந்த கோபி கழக மாவட்டம் மற்றும் நம்பியூர் பகுதி திராவிடர் கழகம்,திமுக, காங்கிரஸ், ஆதித்தமிழர் பேரவை , கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த பொறுப்பாளர்களின் கூட்டு உழைப்பு உபசரிப்பு விருந்தோம்பல் மிகவும் சிறப்பு

இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை மிக சிறப்பாக நடைபெற கடந்த 20 நாட்களாக மிக சிறப்பாக திட்டமிட்டு உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள் நன்றிகள். மாணவர்களை அதிக அளவில் பங்கேற்க செய்த அனைத்து தோழர்களுக்கும் பாராட்டுக்கள்.

பங்கேற்று பயன் பெற்ற இருபால் மாணவர்களுக்கும் பாராட்டுக்கள் நன்றிகள். அனைவரையும் ஒருங்கிணைத்து மிக சிறப்பாக வழி நடத்திய மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு. சென்னியப்பனுக்கும் அவரோடு இணைந்து கூட்டுப் பணியாளர்களாக பணியாற்றிய தலைமை கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம்,மாவட்ட செயலாளர் வெ. குணசேகரன், மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் சிவபாரதி, மாவட்ட மாணவர் கழக செயலாளர் சூர்யா உள்ளிட்ட இளைஞர் அணி,மகளிர் அணி, திராவிட மாணவர் கழகம் பகுத்தறிவாளர் கழகம் பொறுப்பாளர்கள், தோழர்கள், தோழமைக்கு தோழர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் நன்றி

பொருள் உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்கிய அனைவருக்கும் நன்றி
இரண்டு நாள்களும் வருகை தந்து வகுப்புகளை நடத்திய தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் துணைத் தலைவர் கவிஞர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி
அன்புடன்

– இரா.ஜெயக்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்
பெரியாரியல் பயிற்சி பட்டறை பொறுப்பாளர்
திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *