தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் ஆகஸ்ட் 4ஆம் தேதி கார்கே ஆலோசனை

1 Min Read

சென்னை, ஜூலை 30 தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆக. 4-ஆம் தேதி டில்லியில் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக 4 ஆண்டுகளுக்கு மேல் கே.எஸ்.அழகிரி தொடர்கிறார். அண்மைக் காலங்களில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைவர் மாற் றப்பட்ட நிலையில், அழகிரி இன்னும் மாற்றப்பட வில்லை. இதனால் மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 

இந்த விவகாரம் தொடர்பாக தமழ்நாடு காங் கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர், டெல்லி தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதை யடுத்து, தமிழ்நாடு மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசிக்க, அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அனை வருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆக.4-ஆம் தேதி டில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநில மேனாள் தலைவர்கள், 8 நாடாளுமன்ற உறுப்பினர் கள், 18 சட்டமன்ற உறுப் பினர்கள் மேனாள் ஒன்றிய அமைச்சர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழ் நாட்டுக்கு புதிய தலைவர் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. அதேநேரத்தில், ‘‘கே.எஸ்.அழகிரியே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக தொடர்வார். அவர் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ், மக்களவைத் தேர்தலை சந்திக்கும். அவருக்கு அனை வரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நிர் வாகிகள் உட்கட்சிப் பூசலை மறந்து, காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற பாடுபட வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே அறி வுறுத்துவார்’’ என்றும் கட்சியினர் சிலர் கூறுகின்றனர்.எனி னும், இந்த விவகாரம் தொடர்பாக ஆக.4-இல் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *