பெரியார் நினைவு இல்லத்தைப் பார்வையிட்ட ஆசிய அழகி பேட்டி!
ஈரோடு, அக்.28 கடந்த ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய அளவில் அழகிப் போட்டியில் மூன்றாவது இடம் பிடித்த கோவையைச் சேர்ந்த ஏஞ்சல் பானுப்ரியா, அவரது சிங்கப்பூர் நண்பர்களுடன், ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார், அண்ணா நினைவிடங்களிில் உள்ள வரலாற்று ஒளிப்படங்களை ஆர்வத்துடனும், நெகிழ்ச்சியுடனும் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏஞ்சல் பானுப்ரியா, ‘‘பெண் விடு தலைக்காகப் பாடுபட்ட பெரியாரின் நினைவு இல்லத்தைப் பார்வையிட்டது பெருமை தருவதாகவும், பெரியாரின் கொள்கைகளை இன்றைய இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவேண்டும்’’ என்று கூறினார்.