முழு ஒத்துழைப்பு அளிப்பதென காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்
காரைக்குடி, அக். 27- காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 20.10.2024 அன்று மாலை 6.30 மணிக்கு காரைக்குடி சண்முகராஜா சாலை குறள் அரங்க தரைத்தளத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடல் கூட்டத்திற்கு காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ந.செல்வராசன் தலைமையேற்றார். பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் பேரா. மு.சு கண்மணி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஒ.முத்து குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவகோட்டை ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.அரவரசன் அனைவரையும் வர வேற்றார்.
கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம் பற்றி மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி. மோகன் உரையாற்றினார்.
கோட்டையூர் கோபால்சாமி, காரைக்குடி வீ.பாலு, கோட்டையூர் திருமேனி, காரைக்குடி நகர தலைவர் ந.செகதீசன், தொமுச சேகர்,மாநகர துணைத்தலைவர் அ.பழனிவேல்ராசன், மாவட்ட துணைச்செயலாளர் இ.ப.பழனிவேல், மாவட்ட துணைச்செயலாளர் தேவகோட்டை மணிவண்ணன், தேவகோட்டை ஒன்றிய செயலாளர் அ.ஜோசப், மாவட்ட செயலாளர் சி.செல்வமணி, த.பாலகிருட்டிணன், திராவிடர் கழக மாவட்ட காப்பாளர் சாமி திராவிடமணி, தலைமை கழக அமைப்பாளர் கா.மா.சிகாமணி, காரைக்குடி மாவட்ட கழக தலைவர் ம.கு.வைகறை, மாநில அமைப்பாளர் ஓ.முத்துக்குமார், மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் முனைவர் மு.சு. கண்மணி ஆகியோர் உரையைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் உரையில், திருச்சியில் டிசம்பர் 28,29 தேதிகளில் நடைபெறவுள்ள அகில இந்திய பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுயசிந்தனையாளர் மாநாடு, அதன் சிறப்புகள், எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதை பற்றி விளக்கினார். பின்னர், புதிய பொறுப்பாளர்களை அறிவித்தார்
மாவட்ட ஆலோசகர்: விஞ்ஞானி சு.முழுமதி மாவட்ட தலைவர்: துரை.செல்வம் முடியரசன் மாவட்ட செய லாளர்: ந.செல்வராசன்
மாவட்ட அமைப்பாளர்: த.பால கிருட்டிணன்
மாவட்ட துணைத் தலைவர்கள்: முனைவர். செ.கோபால்சாமி, கவிக்கோ அ.அரவரசன்
மாவட்ட துணைச் செயலாளர்கள்:
இரா.முத்துலெட்சுமி, ஆரோக்கியசாமி
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற அமைப்பாளர்: குமரன் தாஸ்
கூட்டத்தில், காரைக்குடி மாவட்ட மேனாள் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் ச.அரங்கசாமி, காரைக்குடி மாவட்ட கழக மகளி ரணி தோழர் இள.நதியாவின் வாழ்வி ணையர் கரு.இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறது எனவும், 2024 டிசம்பர் மாதம் 28,29 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுதந்திர சிந்தனையாளர் மாநாட்டுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதெனவும், மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழக அமைப்பை ஒன்றிய அளவில் விரிவுபடுத்திட உரிய நடவடிக்கை எடுப்பது எனவும், இயக்கத்தில் புதிய உறுப்பினர்களை இணைக்க உரிய நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக மாவட்ட துணைத் தலைவர் முனைவர் செ.கோபால்சாமி நன்றி கூறிட கூட்டம் முடிவுற்றது.