(Floor Level Minimum Wage)
கீழ்க்காணும் நாடுகளின் பெயர்களுக்கு அடுத்து கொடுக்கப்பட்டுள்ள தொகை அந்தந்த நாடுகளின் தொழி லாளர்களுக்கு அந்தந்த நாட்டு அரசுகள் அறிவித்துள்ள ஒரு மணி நேர வேலைக்கான குறைந்த பட்ச ஊதியம்.
1. ஆஸ்திரேலியா – 1130 ரூபாய்
2. லக்சம்பர்க் – 1130 ரூபாய்
3. ஜெர்மனி – 1122 ரூபாய்
4. பிரான்ஸ் – 1122 ரூபாய்
5.நியூசிலாந்து – 1097 ரூபாய்
6.பெல்ஜியம் – 1047 ரூபாய்
7.நெதர்லாந்து – 997 ரூபாய்
8. இங்கிலாந்து – 980 ரூபாய்
9. ஸ்பெயின் – 947 ரூபாய்
10. கனடா – 922 ரூபாய்
11. அயர்லாந்து – 839 ரூபாய்
12. ஸ்லோவேனியா – 798 ரூபாய்
13.தென் கொரியா – 789 ரூபாய்
14. துருக்கி – 731 ரூபாய்
15. ஜப்பான் – 706 ரூபாய்
16. போலந்து – 698 ரூபாய்
17. லித்துவேனியா – 665 ரூபாய்
18. போர்ச்சுக்கல் – 615 ரூபாய்
19. அமெரிக்கா – 602 ரூபாய்
20.இஸ்ரேல் – 581 ரூபாய்
21. ரோமானியா – 548 ரூபாய்
22. செக் குடியரசு – 523 ரூபாய்
23. க்ரோஷியா – 515 ரூபாய்
24. ஹங்கேரி – 515 ரூபாய்
25. கிரீஸ் – 490 ரூபாய்
26. எஸ்டோனியா – 473 ரூபாய்
27. ஸ்லோவாகியா – 473 ரூபாய்
28. லாத்வியா – 399 ரூபாய்
29.பல்கேரியா – 357 ரூபாய்
30. கோஸ்ட்டா ரிக்கா – 340 ரூபாய்
இவை எல்லாம் அந்தந்த நாடுகளில் ஒருமணி நேரம் வேலைக்கான சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம்.
நமது இந்தியாவின் குறைந்தபட்ச ஊதிய அளவு என்னவென்று தெரியுமா?
53 கோடி இந்திய தொழிலாளர்களில் பெரும்பான்மை தொழிலாளர்கள் ஹிந்துக்கள் தானே.
பி.ஜே.பி. அரசு 2017ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முடிவு செய்த குறைந்த பட்ச ஊதியம் அதாவது Floor Level Minimum Wage : 176 ரூபாய் – ஆனால் இது ஒரு மணி நேரத்திற்கல்ல – ஒரு நாளைக்கு…
பி.ஜே.பி.யின் பத்தாண்டு கால ஆட்சியில் ஹிந்துக் களுக்காக நாடாளுமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ள ஊதியம் இது.
இது துரோமல்லவா?
இது ஹிந்துக்களுக்கான ஆட்சியா?
விரைவில் உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது பெரிய நாடாக ஆகுமாம் இந்தியா!
– சமூகவலை தளத்திலிருந்து