சென்னை, ஜூலை 30 – தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணிகளை தமிழர்க ளுக்கு வழங்க வேண்டும் என்று திமுக இளைஞரணி கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
தி.மு.க. இளைஞர் அணியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை அண்ணா அறிவால யத்தில் நேற்று (29.7.2023) நடைபெற்றது.
கூட்டத்துக்கு தி.மு.க. இளை ஞர் அணியின் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவருக்கு இளைஞர் அணி சார்பில் இந்திய தேசிய சின்னம் நினைவுப் பரிசாக வழங்கப் பட்டது. கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா, இளைய ராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், பி.எஸ்.சீனிவாசன், க.பிரபு, ஜி.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழருக்கே. தமிழ்நாட்டின் பணிகள்..
* வங்கி எழுத்தர் பணிக்கு மாநில மொழியை அறிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்ற வங்கி பணியாளர் தேர்வு கழகத்தின் நடைமுறையை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கும் அதே வேளையில், இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டியும், தமிழ்நாட் டில் ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனங்களான ரயில்வே, தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், அஞ்சல் துறை, நெய்வேலி அனல் மின் நிலையம், கல்பாக் கம் அணு மின் நிலையம் உள் ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் அரசுப் பணி களை, தமிழருக்கே வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை இந்த கூட்டம் வலியுறுத்துகி றது.
* சி.பி.அய்., அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை, தங்களின் கொடுங்கரங்களாக மாற்றி, எதிர்த்து குரல் கொடுக் கும் இயக்கங்கள், எதிர்க்கட்சி கள் ஆளும் மாநில அரசுகளின் மீது ஏவும் சட்ட விரோத பழி வாங்கும் போக்கை கையாண்டு அரசியல் லாபம் அடைய துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கோழைத்தனமான போக்கை இந்த கூட்டம் வன் மையாக கண்டிக்கிறது.
* தமிழ்நாடு சட்டப்பேர வையில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பி வைத்த தீர்மானங்களை முடக்கி வைப் பது, `தமிழ்நாடு’ என அண்ணா வைத்த பெயரை மாற்ற முனை வது, அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழல் வழக்குகளைக் கிடப்பில் போடுவது, பொது வெளியில் சமூகநீதிக்கு எதிராக கருத்து களைத் தெரிவிப்பது என அரசியல்வாதியாக செயல் படத் துடிக்கும் ஆளுநருக்கு பலத்த கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
* மக்கள் விரோத பா.ஜ.க. அரசுக்கு மாற்றாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் முன்னெடுப்பில் அமைக்கப் பட்டுள்ள ‘இந்தியா’ (இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்க கூட்டணி) கூட்டணிக்கும், ஜனநாயகம் காக்க களமாடி வரும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும் வாழ்த்துக ளைத் தெரிவித்து, கூட்டணி யின் வெற்றிக்கு உழைக்க உறுதி யேற்கிறது.
10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு
* 2024 நாடாளுமன்ற தேர் தலில், பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட் டணியை முழுமையாக அப் புறப்படுத்த, முற்போக்கு சக்தி களை ஒருங்கிணைக்கும் பணி யில், இந்தியா முழுமைக்குமான நம்பிக்கை முகமாக உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலி னின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக இளைஞர் அணி செய லாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற் தேர்தல் பணிகளில் இளைஞர் அணியினர் முழு மூச்சாக தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
* இளைஞர் அணியின் 2-ஆவது மாநில மாநாட்டை நடத்துவதற்கான அனுமதி அளித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன், மாநாட்டில் 10 லட்சம் இளை ஞர்களை பங்கேற்கச் செய்வது என உறுதியேற்போம் என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட் டத்தில் முன்னதாக, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் எஸ். ஜோயல் வரவேற்புரையாற்றி னார்.