சென்னை, ஜூலை 30 – சென்னை சேத்துப்பட்டில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங் கப்பட்டன.
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன பயிற்சி மய்யத்தின் மேனாள் முதல் வர் எம்.கே.கருப்பையா வின் மூத்த மகள் சூர்யா கடந்த 2014-ஆம் ஆண்டு காய்ச்சலால் திடீரென உயிரிழந்தார். அவரது நினைவாக மருத்துவர் கே.சூர்யா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை குடும்பத்தினரால் தொடங்கப்பட்டது. அவரது நினைவு நாள் மற்றும் பிறந்த நாளன்று ஆதரவற்ற சிறார்கள் மற்றும் முதியோர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மருத்துவர் சூர்யாவின் பிறந்த நாளை முன் னிட்டு, சென்னை சேத் துப்பட்டில் உள்ள மிடில் ஸ்கூலில் தங்கி இருக்கும் ஆதரவற்ற பெண் குழந் தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட் டன. 30-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு சோப்பு, எண்ணெய், டூத் பேஸ்ட் மற்றும் பிரஷ் உள்ளிட்டவை வழங்கப் பட்டன. பின்னர் உண வும் வழங்கப்பட்டது.
மேலும், கல்வியை ஆர்வமுடன் பயில மாண வர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.
இந்நிகழ்ச்சியில் எல்அய்சி பயிற்சி மய்ய மேனாள் முதல்வர் எம். கே.கருப்பையா, எல்அய்.சி வளர்ச்சி அதி காரிகள் ஆறுமுகசாமி, அய்யாசாமி, எல்அய்சி முதல்நிலை கிளை மேலா ளர் காளிமுத்து, எல் அய்சி ஆலோசகர் சுவிகர் ஜேக்கப், அருண் ரெயின் போ ஹோம்ஸ் இல்ல நிர் வாகி தமிழ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.