கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 25.10.2024

viduthalai
1 Min Read

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு

தி இந்து:

* நீட் 2025 தேர்வு முறையில் சாத்தியமான மாற்றங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்ட உயர் அதிகாரம் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து தேசிய தேர்வு முகமை மவுனம் காக்கிறது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

*அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் குஜராத் திகள் – கடந்த ஓராண்டில் ஒரு மணி நேரத்திற்கு 10 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றனர். இதுவரை 90,000 பேர் கைது, இதில் 50 சதவீதம் குஜராத்தை சேர்ந்தவர்கள் என சட்டவிரோத குடியேற்றங்களை கண்காணிக்கும் இந்திய முகவர்களின் வட்டாரங்கள் தெரிவித்தன.

* ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற குழு முன்பு செபி தலைவர் ஆஜராகாமல் தவிர்ப்பு: அழைப்பாணை குழு தலைவர் வேணுகோபால் எம்.பி.க்கு எதிராக மக்களவைத் தலைவரிடம் பாஜக புகார். ‘செபி தலைவர் மாதவி புச்சை காப்பாற்றும் திட்டத்தின் பின்னணியில் யார்’ என ராகுல் காந்தி கேள்வி

* திராவிடர் அடையாளத்தை சவால் செய்வது இனவெறி ஆகிவிடும்: திருமாவளவன் பேட்டி
குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *