புதுடில்லி, அக். 24- சுற்றுலா செல்லும் நாட்டில் தனியுரிமை, சுதந்திரத்துடன் அதிக இடங்களைச் சுற்றிப் பார்க்கும் வசதிக்காக வாடகை கார் எடுத்துக் கொண்டு, சுயமாக ஓட்டிச் செல்லும் கலாச் சாரம் வெளிநாடுகளில் சகஜமானது.
இந்தியாவிலும் பல நிறுவனங்கள் இச்சேவையை வழங்கி வருகின்றன. இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவா்களில், பெரும் பாலானவா்கள் இதைப் பயன் படுத்திக் கொள்கின்றனா்.
சமீப காலங்களில் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் இடையே நன்கு பழக்கப்பட்ட சாலைகளில் வாகனம் ஓட்டுவதே நாள்தோறும் புதிய அனுபவத்தை நமக்கு அளிக்கிறது.
அப்படியென்றால், முன் அறிமுக மில்லாத சாலை அமைப்புகளில் பயணம் செய்யும் வெளிநாட்டு ஓட்டுநா்களுக்கு புதிய விதிகள், சக வாகன ஓட்டிகளின் போக்குவரத்து ஒழுங்கு என பதற்றமடைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.
அந்தவகையில், உலகளாவிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிகவும் பதற்றமாக வாகனம் ஓட்டும் நாடாக இந்தியா இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
எந்தெந்த நாடுகளில் வாகனம் ஓட்டுவது அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதைக் கண்டறிய உலகம் முழுவதும் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளிடம் பிரிட்டனைச் சோ்ந்த ‘ஸ்கிரேப்கார் கம்பேரிஷன்’ நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
தரவரிசையில் 10-க்கு 7.15 புள்ளி களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. முதல் பத்து இடங்களில் மேற்கண்டவாறு ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
கார்கள், இருசக்கர, கனரக வாகனங்களுடன் ரிக்ஷா முதல் கால்நடைகள் வரை இந்திய சாலை களைப் பகிர்ந்துகொள்கின்றன. மேலும், அதிக போக்குவரத்து நெரிசலுடன் கணிக்க முடியாத நிலைமைகளுக்குப் பெயா் பெற்றதாக இந்திய சாலைகளில் வாகனம் ஓட்டுவதில் அதிக ஆபத்துகளை உணா்வதாக வெளிநாட்டு வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனா்.
கூடுதலாக, பிரிட்டன் போன்ற நாடுகளில் அவசர காலத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் ஹார்ன்கள் ஒரு தகவல்தொடா்பு வடிவமாக இந்தியாவில் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. இது சத்தமில்லாத பயணங்களுக்குப் பழக்கப்பட்ட ஓட்டுநா்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைப் போலவே, இந்தியா விலும் கிராமப்புற சாலைகள் கணிசமாக வளா்ச்சியடையவில்லை.
கடந்த ஆண்டு தரவரிசையின்படி, உலகின் மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களில் 6-ஆவது இடத்தில் பெங்களூரு (ஆசிய கண்டத்தில் முதலாவது) 7-ஆவது இடத்தில் புணே, 44-ஆவது இடத்தில் தலைநகா் டில்லி, 54-ஆவது இடத்தில் மும்பை ஆகியவை உள்ளன.
பெங்களூரு, புணே ஆகிய நகரங்களில் சராசரியாக 10 கி.மீ. தொலைவைக் கடக்க 28 நிமிஷங்கள் ஆகின்றன.