ஜார்க்கண்ட் தேர்தல் : இந்தியா கூட்டணி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ராஞ்சி, அக்.24 ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன.
முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம், காங்கிரஸ், ஆர்ஜேடி, சிபிஅய் (எம்எல்) ஆகிய இண்டியா கூட்டணி கட்சிகள் இத்தேர்தலை இணைந்து சந்திக்கின்றன. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 70 இடங்களில் ஜேஎம்எம், காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் போட்டியிட முடிவு செய்தன.

எஞ்சிய 11 தொகுதிகளை ஆர்ஜேடி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளன. காங்கிரஸ் கட்சி 21 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை கடந்த 21.10.2024 அன்று வெளியிட்டது.இந்நிலை யில் 35 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) நேற்று (23.10.2024) வெளியிட்டது. இதில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஹேமந்த் சோரன்: சாகிப்கஞ்ச் மாவட்டம் பர்ஹைத் தொகுதியில் ஹேமந்த் சோரனும் கிரிதி மாவட்டம் காண்டே தொகுதியில் கல்பனாவும் போட்டியிடுகின்றனர். இதுபோல் ஜேஎம்எம் கோட்டையான தும்காவில் ஹேமந்த் சோரனின் தம்பி பசந்த், நலா தொகுதியில் சட்டமன்றத் தலைவர் ரவீந்திர நாத் மகதோ போட்டி யிடுகின்றனர்.

5 அமைச்சர்கள் உட்பட 21 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஜேஎம்எம் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் அவர்களின் தொகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளனர். முதல்பட்டியலில் இடம்பெற்றுள்ள அமைச்சர் மதிலேஷ் குமார் தாக்குர் உள்ளிட்ட 6 பேர் ஏற்கெனவே வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டதாக ஜேஎம்எம் பொதுச் செயலாளர் வினோத் குமார் பாண்டே கூறினார். இதுபோல் இந்தியா கூட்டணியின் மற்றொரு கட்சியான ஆர்ஜேடி நேற்று 6 வேட்பாளர்களை அறிவித்தது.
இவர்களில் மாநில ஆர்ஜேடி தலைவர் சஞ்சய் குமார் சிங் யாதவ் ஹுசைனாபாத் தொகுதியிலும், மேனாள் அமைச்சர் சுரேஷ் பாஸ் வான் தியோகர் தொகுதியிலும் போட்டி யிடுகின்றனர். ஹேமந்த் சோரன் அமைச் சரவையில் இடம்பெற்றுள்ள சத்யானந்த் போக்தாவுக்கு ஆர்ஜேடி இம்முறை வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால் அவரது மருமகளுக்கு சத்ரா தொகுதியில் வாய்ப்பு வழங்கியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *