புதுடில்லி, அக்.23- ஹிந்துத் வாவின் பெயரை, இந்திய அரச மைப்பு என்று பொருள்படும் பாரதிய சம்விதானத்வா என்று மாற்ற உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாட்டின் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளில், ஹிந்துத்வா என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஹிந்து தேசியவாத கொள்கையுடன், ஹிந்து மதிப்பீடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
ஹிந்துத்வா என்ற வார்த்தைக்குப் பதிலாக, இந்திய அரசமைப்பு என்று பொருள்படும் பாரதிய சம்விதானத்வா என்று மாற்றக் கோரி டாக்டர் எஸ்.என்.குந்த்ரா என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக மதிப்பீடுகளுடன் நெருக்கமாக இருப்பதால், ஹிந்துத்வா பெயரை பாரதிய சம்விதானத்வா என்று மாற்ற வேண்டும் என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், இந்த வாதத்தை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு ஏற்கவில்லை. ஹிந்துத்வா தொடர்பான வழக்குகளை விசா ரிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை உறுதிசெய்யும் வகையில், இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக அமர்வு கூறியுள்ளது.