ஆவடி, அக். 23- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 20-10-2024 அன்று மாலை 5.30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் மாவட்ட கழக துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் வரவேற் புரையுடன் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் மாவட்ட செயலாளர் க.இள வரசன் ஒருங்கிணைப்பில் ஆவடி நகர கழக செயலாளர் தமிழ் மணி கடவுள் மறுப்பு கூற நடைபெற்றது.
முதலில் கடலூர் மாவட்ட சுயமரியாதைச் சுடரொளி சீனியம்மாள் அவர்களின் ஆறா வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவுக் குறிப்பு வாசிக்கப்பட்டது.
அடுத்து தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலம் மற்றும் கழக கொடிகள் ஏற்றும் நிகழ்வின் வரவு- செலவு, திருநின்றவூர் பகுதி கூட்ட வரவு- செலவு வாசிக்கப்பட்டது.
நவம்பர் 26 அன்று ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – குடிஅரசு நூற்றாண்டு விழா மாநாடு மற்றும் டிசம்பர் 28, 29 திருச்சியில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக மாநாட்டிற்கு ஆவடி மாவட்ட கழக சார்பில் பேருந்து ஏற்பாடு செய்து கலந்து கொள்ளமுடிவு செய்யப்பட்டு, மாவட்ட திராவிடர் கழக அனைத்து அணி தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் மாணவ- மாணவியர்களின் நலனை கருதி ஆவடி பெரியார் மாளிகையில் தேவையான புத்தகங்கள் மற்றும் பயிற்சியாளர்களை நியமிப்பது. தமிழ் நாட்டின் ஆளுநராக இருந்து கொண்டு தமிழர் விரோத போக்கினை மேற்கொண்டு தமிழ் நாடு அரசிற்கும் தமிழர்களின் இன உணர்விற்கு எதிராக பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில் ஒன்றிய அரசு உடனடியாக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் 09-09-2024 அன்று திருமண நாள் கண்ட ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் ஜெயராமன் – பேபி மற்றும் 14-09-2024 ஆவடி நகர கழக துணை தலைவர் சி.வச்சிரவேல்- வ.சிவகாமி இணையர்களுக்கு மாவட்ட தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார்.
மற்றும்12-09-2024 ஆவடி மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன்,27-09-2024 ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் சுந்தர் ராஜன்,11-10-2024 பட்டாபிராம் பகுதி கழக தலைவர் இரா.. வேல்முருகன் ஆகியோரின் பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்து பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 17-09-2024, 22-09-2024 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் அனைத்து பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தும் மாவட்டம் முழுவதும் இரு சக்கர வாகன ஊர்வலமாக சென்று கழகக் கொடி ஏற்ற சிறப்பாக செயல்பட்ட மாவட்ட திராவிடர் கழக தொழிலாளர் அணி தலைவர் கி.ஏழுமலைக்கும் 29.06.2024 அன்று சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த திருநின்றவூர் பகுதி திராவிடர் கழக தலைவர் அருணுக்கும் மாவட்ட திராவிடர் கழகத்தை சிறப்பாக வழி நடத்தி செல்லும் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன் ஆகியோரை பாராட்டி வாழ்த்தியும் பயனாடை அணிவிக்கப்பட்டது.
திராவிடர் கழக மாநில தொழில்நுட்ப குழு ஒருங்கிணைப் பாளர் வி.சி.வில்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
மேற்கண்ட தீர்மானங்களை யொட்டி மாவட்ட துணை தலைவர்கள் மு.ரகுபதி,வை.கலையரசன், திருநின்றவூர் நகர தலைவர் அ.அருண், செயலாளர் கீதா ராமதுரை, ஆவடி நகர தலைவர் முருகன், செயலாளர் தமிழ் மணி, ஆவடி மாவட்ட கழக இளைஞரணி தலைவர் சு.வெங்கடேசன், பகுத்தறிவு, சந்தோஷ், சென்ன கிருட்டிணன், ஆவடி மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அன்புச் செல்வி, பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால்,கா.சின்னதுரை ஆகியோர் உரையாற்றினர்.நிகழ்வில். திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன். (எ) அருள்தாஸ், செயலாளர் ரவீந்திரன், பூவிருந்தவள்ளி பகுத்தறிவு சந்திரபாபு, திருவேற்காடு இளைஞரணி தோழர்கள் பசுபதி, பாக்யலட்சுமி, பிரபாகரன், திருநின்றவூர் நகர இளைஞரணி செயலாளர் மா.சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக பூவிருந்தவள்ளி பாலகிருஷ்ணன் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.