23.10.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* காங்கிரஸ், பவார் மற்றும் உத்தவ் ஆகியோர் அடங்கிய மகாராட்டிரா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.
* ஸநாதனம் குறித்து தனது கருத்துக்கு மன்னிப்பு என்பது எப்போதும் கிடையாது – துணை முதலமைச்சர் உதயநிதி திட்டவட்டம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜார்கண்ட் பாஜக தலைவர்கள் அதிருப்தி காரணமாக சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்தனர்.
* அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப்-அய் காட்டிலும் கமலா ஹாரிஸ்-க்கு கூடுதல் ஆதரவு என கணிப்பு.
* கேரளா வயநாடு இடைத் தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி இன்று மனு தாக்கல் செய்கிறார். பேரணியில் சோனியா, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜார்கண்ட் மாநிலத்தில் சோரன் தலைமையிலான ஜே.எம்.எம்., காங்கிரஸ் கூட்டணியில் ஆர்.ஜே.டி.யும் இணைந்து தேர்தலில் போட்டியிடும். ஹேமந்த் சோரன் மீண்டும் ஜேக்கண்ட் முதலமைச்சராவார்; தொகுதி பங்கீட்டில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது என ஆர்ஜேடியின் தேஜஸ்வி பேட்டி.
* சிறந்த பாதுகாப்பு, உதவித்தொகை அதிகரிப்பு மற்றும் கட்டாய பத்திர கொள்கையை திருத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அரசு மருத்துவமனைகளை சேர்ந்த 7,000 குடியுரிமை மருத்துவர்கள் அக்டோபர் 19 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், ராஜஸ்தான் முழுவதும் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தி டெலிகிராப்:
* மதிப்பீடு இருப்பதால், தென்னிந்தியாவில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டிற்கு ஆதரவாக இருந்த முதலமைச்சர்கள் சந்திரபாபு மற்றும் மு.க.ஸ்டாலின் தற்போது மக்கள் தொகை அதிகரிக்க ஆதரவு தர முன் வந்துள்ளார்கள்.
* பஹ்ரைச்சில் சமீபத்தில் நடந்த வகுப்புவாத வன்முறையில் சந்தேக நபர்களுக்கு சொந்தமான சொத்துக்களை இடிக்கும் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு அதிகாரிகள் செயல்படுத்தினால் அவமதிப்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மகாராட்டிரா மாநில பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியலில் மாணவர்கள் மதிப்பெண் எடுப்பதில் சிரமம் உள்ளதால், எஸ்எஸ்சியில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை 100க்கு 35லிருந்து 20 ஆகக் குறைத்திட அரசு முடிவு.
* தமிழ்நாட்டில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த தங்களது குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை விரைவில் சந்திக்கும் என தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவின் தலைவரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருமான வேல்முருகன் தெரிவித்தார்.
குடந்தை கருணா