உரத்தநாடு, அக். 23- உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழக சார்பில் நடைபெற்ற இழிவை சுமத்தும் இதிகாச புராணங்கள் என்ற தலைப்பில் சிந்தனையரங்கம் உரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர் த.செகநாதன் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கழகச் சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் சிறப்புரையாற்றி னார்.
தொடக்கிவைத்து சிறப்பாக உரையாற்றிய மாவட்டத் தலைவர் வழக்குரைஞர்.சி.அமர்சிங்கிற்கு சட்டக்கல்லூரி மாணவர் த.அன்புவீரமணி பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். உரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம் தலைமையேற்றார்.
ஒன்றிய கழக தலைவர் த. ஜெகநாதன், ஒன்றிய துணைத் தலைவர் நெடுவை கு.நேரு ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
மாநில திராவிடர் கழக ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு குணசேகரன், மாநில மாணவர் கழக செயலாளர் செந்தூர் பாண்டியன், பெரியார் பிஞ்சுகள் தெ.நாவ லன், க.புகழினி ஆகியோர் உரையாற்றினர்.
திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் க.கவிபாரதி நன்றி கூறினார்.
கூட்டத்தில் பெரியார் வீர விளை யாட்டு கழக மாநில செயலாளர் நா.ராம கிருஷ்ணன், இந்திய தேசிய காங்கிரஸ் மாநில செயலாளர் செ.சாமிநாதன், மாவட்ட வழக்குரைஞர் அணி செயலா ளர் க.மாரிமுத்து, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அ.இராமலிங்கம், ஒன்றிய விவசாய அணி செயலாளர் க. அறிவரசு, ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் துரை. தன்மானம், ஒன்றிய இளைஞரணி தலைவர் ரெ.ரஞ்சித்குமார், ஒன்றிய மாணவர் கழகத் தலைவர் ர.நிரஞ்சன் குமார், ஒக்கநாடு மேலையூர் கிளைகழக செயலாளர் நா. வீரத்தமிழன், மா.தென்னகம், பொறியாளர் ப.பாலகிருஷ்ணன், க.மாணிக்கவாசகம், பெரியார்நகர் வெ.சக்திவேல் உள்ளிட்ட கழகத் தோழர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தீபாவளி உள்ளிட்ட ஆபாச, அறிவுக் கேடான பண்டிகைகளை புறக்கணிப்போம் என மாணவர்கள் உறுதி கூறினார்கள்.