நாக்பூரில் ஷாலிமர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன
நாக்பூர், அக். 23- மகாராட்டிர மாநிலம், கலாம்னா ரயில் நிலையம் அருகே சிஎஸ்எம்டி ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ் 2 மற்றும் ஒரு பார்சல் பெட்டி என இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது பெரிய காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
இருப்பினும், பயணிகள் தங்களது சொந்த இடத்துக்கு செல்ல அனைத்து முயற்சிகளையும் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்து தொடர்பாக அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டதோடு பயணிகளுக்கு அடிப்படை வசதிகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், மற்றொரு புறம் சீரமைப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. முன்னதாக அக்டோபர் 9 ஆம் தேதி, கல்யாண் ரயில் நிலையத்தில் உள்ளூர் ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளியை குறிவைத்து இணைய மோசடி
தீபாவளி நெருங்கிவரும் வேளையில் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது. பலர் இணையம் மூலம் பட்டாசு வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாள்களில் மட்டும் இணையவழி பட்டாசு விற்பனையை மய்யமாகக் கொண்டு 7 சைபர் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விடயத்தில் மக்கள் கவனமாக இருக்கவும் எச்சரித்துள்ளனர்.