காரைக்கால், அக். 22- காரைக்கால் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர பாண்டியன் தலைமையில் காரைக் காலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 21.9.2024 அன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பொதுக்குழு உறுப்பினர் க. பதிஜெயசங்கர், காரை மாவட்ட கழக துணை செயலாளர் செ.செந்தமிழன், மனோ, அறிவுச்செல்வன், மு.க.ஸ்டாலின், சிவ புகழ் ஆகியோர் முன்னிலை வைத்திருந்தனர்.
கலந்துரையாடல் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் காரை மாவட்ட திராவிட மாணவர் கழகத் துணைத் தலைவர் சே.சசிகுமார் வரவேற்றார்.
மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் இளமாறன் தொடக்க உரையாற்றினார்.
புதுச்சேரி மாநில கழக தலைவர் சிவ. வீரமணி. காரைக்கால் மாவட்ட கழக தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி, காரைக்கால் மாவட்ட கழக செயலாளர் பொன்.பன்னீர்செல்வம் ,மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, மாவட்ட இளைஞரணி செயலாளர் லூயிஸ் பியர், மாவட்ட இளைஞரணி தலைவர் பெரியார் கணபதி ஆகியோர் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கத்தை பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் நடத்துவது தொடர்பாகவும், உண்மை இதழுக்கு சந்தாக்களை அதிகப்படியாக திரட்டி தருவது சம்பந்தமாகவும், கழக அமைப்பு பணிகளை எப்படி எடுத்துச் செல்வது என்றும் கலந்து கொண்ட மாணவர்களிடைய கருத்துரை வழங்கினார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் மாணவர்களின் கல்விக்கு குறிப்பாக பெண் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார்.
ஒரு குடும்பத்தில் ஆணை விட பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமே கல்வி கற்றதற்கு சமம் என்று சொன்னார் ராஜாஜியால் மூடப்பட்ட 6 ஆயிரம் பள்ளிகளை காமராஜரை கொண்டு திறக்க வைத்தார் கல்வி வேலை வாய்ப்புக்காக முதல் அரசியல் சட்டம் திருத்தப்படுவதற்கு தந்தை பெரியார் அவர்கள் தான் காரணமாக இருந்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாணவர் கழக அமைப்புகளை அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார் அதனால் இங்கு அதிக அளவில் மாணவர்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள் மாணவிகளும் வந்து இருக்கிறீர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது இதோடு நின்று விடாமல் மாணவர்களை சந்தித்து திராவிட மாணவர் கழகத்தில் சேர்க்க வேண்டும் மாணவர் கழகம் சார்பாக தனியாக கருத்தரங்கத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தலைமை உரையாற்றிய திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன் பேசினார்.
இறுதியாக மாணவர் கழக இளைஞர் அணி துணை செயலாளர் மனோ நன்றி கூறினார். இந்நிகழ்வை ஒருங்கிணைத்து 40-க்கும் மேற்பட்ட மாணவர்களை கருத்தரங்கத்திற்கு இணையாக, கலந்து ரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்ள வைத்திருந்தார் காரைக்கால் மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் மோகன்ராஜ், அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி மாணவர்கள் , பி.எட்., கல்லூரி மாணவர்கள் என 40-க்கும் மேற்பட்ட மாணவர்களும் மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட தலைவர் குரு.கிருஷ்ணமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் க.பதிஜெய சங்கரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
காரைக்கால் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் மிகச் சிறப்பாக கலந்துரையாடல் கூட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.