தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியாரின் முழு உருவச் சிலைக்கு 17.09.2024 அன்று காலை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் துணைமுதல்வர் தி.விஜயலெட்சுமி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.