அதிருப்தி
நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற அரசு அதிகாரிகள் துளியும் முயற்சிப்பது இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தவறுகளை…
சிறிய குற்றங்களுக்காக கடைநிலை ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் நிலையில் உயர் அதிகாரிகளை அரசு கண்டு கொள்ளாதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அறிவுறுத்தல்
மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்தில் பெண்கள் சுய மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் அறிவித்துள்ளார்.
மின்சாரத்தை…
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சூரிய சக்தி மின்சாரத்தை ‘பேட்டரி ஸ்டோரேஜ்’ தொழில்நுட்பத்தில் சேமித்து வைத்து இரவில் வழங்குமாறு ஒன்றிய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் தமிழ்நாடு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
அதிகம்
தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் கடந்த 2 ஆண்டுகளில், தேசிய அளவிலான தனிநபர் வருமானத்தை விட அதிகமாக இருந்ததாக தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மதிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளது.
அவகாசம்
குரூப்-1 தேர்வில் விடுபட்ட சான்றிதழ்களை தேர்வர்கள் நவம்பர் 2ஆம் தேதிக்குள் இணையவழியில் பதிவேற்றம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
செய்திச் சுருக்கம்
Leave a Comment