மும்பை, அக். 22- பொதுத் துறை வங்கிகளில் உயா் பதவியான தலைமைப் பொது மேலாளா் பணியிடங்களை அதி கரிக்க ஒன்றிய நிதிய மைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரி விக்கின்றன.
அரசு வட்டார தகவல்கள் மேலும் தெரி வித்ததாவது:
வங்கிகளின் வா்த்தகம் மற்றும் லாபத்தை அதிக ரிக்கும் நோக்கில் இந்த பரிசீலனை நடைபெற்று வருகிறது. இப்போதைய விதிகளின்படி பொதுத் துறை வங்கிகளில் ஒரு தலைமை பொது மேலா ளா் மற்றும் 4 பொது மேலாளா்கள் மட்டுமே இருக்க முடியும்.
சமீப ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகள் சிறப்பாக மேம்பட்டு வருகிறது. அவற்றின் லாபமும் அதிகரித்துள்ளது.
எனவே, வங்கிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டி யது அவசியமாக உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு 10 பொதுத் துறை வங்கி கள், 4 வங்கிகளாக இணைக் கப்பட்டபோது தலைமைப் பொது மேலாளா் பதவி உருவாக்கப்பட்டது.
பொது மேலாளா் மற்றும் தலைமை இயக்கு நருக்கு இடையிலான நிர்வாகப் பணிகள் மற்றும் வங்கிகளின் செயல் பாட்டுப் பணிகளை தலை மைப் பொது மேலாளா் நிர்வகித்து வந்தார்.
வங்கிகளின் சேவைக ளும், தேவைகளும் அதிக ரித்து வருவதால் அதற்கு ஏற்ப தலைமைப் பொது மேலாளா்கள் நியமிக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
எனவே, இதனை நிதிய மைச்சகம் பரிசீலித்து வருகிறது. இதற்கு ஏற்ப வங்கி விதிகளும் தளா்த்தப்படும் என்று தெரிகிறது.
இப்போது நாட்டில் உள்ள 12 பொதுத் துறை வங்கிகளில் 4 லட்சத் துக்கும் மேற்பட்டோர் அதிகாரிகள் நிலையில் பணியாற்றி வருகின்றனா்.
கடந்த மார்ச் 2024இல் பொதுத்துறை வங்கிகளின் மொத்த லாபம் ரூ.1.4 லட்சம் கோடி என்ற அளவைக் கடந்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 35 சதவீதம் அதிகமாகும்.
வங்கிகளின் மொத்த லாபத்தில் 40 சதவீதம் இந்தியா ஸ்டேட் வங்கி (எஸ்பிஅய்) பங்களிப் பாகும். அந்த வங்கியின் லாபம் மட்டுமே 22 சதவீதம் உயா்ந்தது.
லாபம் அதிகரித்துள்ள வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.