அய்யப்பன் சக்திமீது
நம்பிக்கை இல்லையா?
* சபரிமலை பக்தர்களுக்கு விரிவான மருத்துவ வசதிகள் செய்யப்படும்.
– கேரள அமைச்சர் வீனாஜார்ஜ்
>> ஏன், அய்யப்பன் சக்திமீது நம்பிக்கை இல்லையா?
‘‘கடவுளை மற–மனிதனை நினை!”
–தந்தை பெரியார்
இதன்மூலம் விளங்கவில்லையா
* தமிழ் மொழிக்கு எதிரானவர்கள் பி.ஜே.பி.யினர் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சி.
– ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு
>> அப்படியா, சமஸ்கிருத வாரம் கொண்டாடத் தெரிந்த பி.ஜே.பி. அரசு, ஹிந்தி மொழி கொண்டாட்டம் நடத்த தெரிந்த ஒன்றிய அரசு, தமிழ் மொழி கொண்டாட்டம் நடத்தாதது ஏன்? செத்துப்போன சமஸ்கிருத மொழிக்கு, எட்டு ஆண்டுகளில் ரூ.1,488 கோடி. ஆனால், தமிழ் வளர்ச்சிக்கோ வெறும் ரூ.74 கோடி.
தமிழ் மொழிக்கு எதிரானவர்கள் பி.ஜே.பி.யினர் என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?