ரூ.10,375 கோடியில் திட்டங்கள் – 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!
சென்னை, அக். 21- தமிழ் நாட்டில் விரைவில் 4000 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையங்கள் ஏற்படுத்துவதன் மூலம் தென் மாவட்டங்கள் மின் உற்பத்தி மைய மாகிறது. 3000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிப் பதற்காக ரூபாய் 10 ஆயிரத்து 375 கோடியில் திட்டங்கள் செயல் படுத்தப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக 10 ஆயிரம் மெகாவாட்டாக இருந்த ஒரு நாள் மின் தேவை 20 ஆயிரம் மெகாவாட்டை கடந்து விட்டது. மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும் போது அதன் உற்பத்தியை பெருக்க வேண்டியது அவசியமாகிறது.
ஒரு காலத்தில் நீர் மின்சாரம், அனல் மின்சாரம் மூலமே தமிழ்நாட்டின் மின் தேவை சமாளிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் காற்றாலை மின் உற்பத்தி, சூரிய மின் உற்பத்தி என மரபு சாரா எரிசக்தி உற்பத்தியும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
காற்றாலைகளைப் பொறுத்தவரை நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட் டங்களில் அதிகம் உற்பத்தி செய் யப்படுகிறது. மே மாதம் இறுதியில் காற்று சீசன் தொடங்கி ஜூன், ஜூலை மாதங்கள் அதிக காற்று வீசும் காலங்களாகும். இந்த மாதங்களில் காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக இருக்கும். இது மட்டுமல்லாது சூரிய மின் சக்தி மூலமும் மின்சாரம் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
பசுமை மின்சார திட்டங்கள்
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த 2021இல் பொறுப் பேற்றது முதல், தொழில் துறை, விவசாயம், வணிகம், தகவல் தொழில்நுட்ப மய்யங்கள், மெட்ரோ ரயில் திட்டங்கள், மின்சார வாகன மின்னூட்ட நிலையங்கள் அமைப்பதற்காக திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார்.
இதன் மூலம் 2030க்குள் தமிழ்நாட்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்டுவதற்காக தொழில் துறையினருக்கு சீரான மின்சாரம் கிடைப்பதற்கு பசுமை மின்சார திட்டங்களை ஊக்குவித்து வருகிறார்.
இதற்காக சுற்றுச்சூழ லுக்கு மாசு இல்லாத காற்றாலை மின்சாரம், சூரிய மின்சார திட்டங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, ராமநாதபுரம், திருவண்ணா மலை மாவட்டங்களில் பிஎஸ்ஜி குழுமத்தின் துணை நிறுவனமான லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.10,375 கோடி மதிப் பீட்டில் 3 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் காற்றாலை, சூரிய மின் உற்பத்தி நிலையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளது.
காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரிக்கத் திட்டம்
2015இல் தொடங்கப்பட்ட லீப் எனர்ஜி நிறுவனம் திருப்பூர் மாவட்டம் மேட்டுப்பாளையம், நெல்லை, தூத்துக் குடி மாவட் டங்களில் காற்றாலைகளை நிறுவியுள்ளது.
2029க்கள் 6 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை உயர்த்த திட்ட மிட்டுள்ள இந்த நிறுவனம் தூத்துக்குடி, நெல்லை, ராம நாதபுரம், விருதுநகர் மாவட் டங்களில் மின்சார உற்பத்தி நிலையங்களை நிறுவ உள்ளது. இந்த நிறுவனம் ஏற்கெனவே தூத்துக்குடி மாவட்டம், எட்ட யபுரத்தில் காற்றாலைகள் மூலம் 400 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது.
தற்போது மேற்கொண்டுள்ள புதிய ஒப்பந்தத்தின் படி அங்கு 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தி திட்டத்தை தொடங்க உள்ளது.
இதுதவிர தூத்துக்குடி மாவட் டத்தில் கயத்தாறு அய்யனார் ஊற்றுப் பகுதியில் 1000 மெகா வாட் சூரிய மின் உற்பத்தி திட்டத்தை யும், விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி பகுதியில் 750 கிலோவாட் துணை மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் 1000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டத்தையும் தொடங்க உள்ளது.
இதன் மூலம் எதிர் காலத்தில் காற்றாலையைத் தொடர்ந்து சூரிய மின் சக்தி உற்பத்தியிலும் நெல்லை, தூத்துக்குடி மாவட் டங்கள் சாதனை படைக்க இருக்கிறது.
சூரியமின் உற்பத்தி திட்டங்கள்
பூமியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பசுமையான மின்சாரம் உற்பத்தி அதாவது காற்றாலைகள், சூரிய மின்சக்தி ஆகியவற்றால் சுற்றுச்சூழ லுக்கு எந்தக் கேடும் இல்லை.
மேலும், மின்சார வாகனங்கள் பயன்பாடும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதற்காகவே தூத்துக் குடியில் வின்பாஸ்ட் மின்சாரக் கார் உற்பத்தி ஆலைக்கு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
அந்த வரிசையில் தற்போது காற்றாலை, சூரிய மின் சக்தி திட்டங்களுக்கும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில் திட்ட மிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் முதல் மாநிலமாக திகழ்கிறது. இங்கு காற்று வீசும் காலங்களில் அதிகபட்சமாக 10,491 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவிற்கு காற்றாலைகள் நிறுவப்பட் டுள்ளன. இந்த மின் உற்பத்தி மாநிலத்தின் மின் உற்பத்தியில் 9 சதவீதம் ஆகும்.
தமிழ்நாட்டின் மின் உற்பத்தி நீர் மின் நிலையங்கள், அனல் மின் நிலையங்கள், கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள் மூலம் நடந்து வருகிறது.