தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் உண்மை வாசகர் வட்ட 32ஆவது நிகழ்ச்சி-பால்.ராசேந்திரம் சிறப்புரை

1 Min Read

தூத்துக்குடி, அக். 21- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்ட 32ஆவது நிகழ்ச்சி, 12.10.2024 அன்று மாலை 5.30 மணிக்கு பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் நடந்தது.
மாவட்ட கழக தலைவர் மு.முனியசாமி தலைமை வகித்தார். மாநகரத் திராவிட மாணவர் கழகத் தலைவர் வழக்குரைஞர் இ.ஞ.திரவியம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். உலகத் திருக்குறள் பேரவை மாவட்டச் செயலாளர் மோ.அன்பழகன், குடிசெய்வார்க்கில்லை பருவம் என்னும் குறள் வழிச் சோம்பலை விடுத்துத் தொண்டறப் பணி செய்திடப் பயணப்பட்டவர் தந்தை பெரியார் அவர்கள். அவரின் நெஞ்சில் தைத்த முள்ளான அனைத்து ஜாதியும் அர்ச்சகர் என்ற குறிக்கோளை நிறைவேற்றியவர் கலைஞர், நடைமுறைப்படுத்தியவர் தளபதி மு.க.ஸ்டாலின் என்று தொடக்கவு ரையாற்றினார்.

மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சொ.பொன்ராஜ், சீ.மனோகரன் ஆகியோர் உரைக்கு பின் கழகப் பேச்சாளர் உண்மை வாசகர் வட்டச் செயலாளர் மா.பால்ராசேந்திரம், தந்தை பெரியார் சாதித்தவைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மூடநம்பிக்கையினைச் சடங்குகள் என்ற பெயரில் கைக்கொண்டு வந்த மக்ளைத் திருத்திப் பகுத்தறிவாளர்கள் ஆக்கியதும், பாமரரும் படிக்கக் கல்விச் சாலைகள், பயணிக்கப் பேருந்துகள், நீரெடுக்கப் பொதுக் கிணறுகள் எனத் தொடரப்படுவதற்கும், ஆண்களுக்குரிய உரிமைகளை பெண்களுக்கும் வழங்கி, பெண்கள் நிலையை மாற்றியதும் தந்தை பெரியாரின் சாதனைகளால்தான் என்று சிறப்புரையாற்றினார். மாவட்ட கழக துணைத் தலைவர் இரா.ஆழ்வார் நன்றி கூறினார்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சி.மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். கி.கோபால்சாமி, ராபின், மொ.ஜெகவீர கட்டபொம்மு, கவிஞர் கோ.இளமுருகு, கணேசன், கு.ஆனந்தி, அ.பிரசாத், பொ.போஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *