கவிஞர் கலி.பூங்குன்றன்
சிந்து சமவெளி நாகரிகம் பற்றி ஆய்வு செய்ய ஒன்றிய பிஜேபி அரசு 17 பேரைக் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளது. அதில் 14 பேர் பார்ப்பனர்கள், மூவர் அதிகாரிகள்.
இதுபற்றி தி.மு.க. பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்கள் கேள்வி எழுப்பியதற்கு ‘தினமலர்’ – ‘டாக்டர் என்றாலும், ஆடிட்டர் என்றாலும் பார்ப் பனர்கள்தானே தேவைப்படுகிறார்கள். இதுபோன்ற நிபுணர் குழுவில் சேர்க்க பார்ப்பனரல்லாதார் யார் இருக்கிறார்கள்?’ என்ற தோரணையில் ‘தினமலர்’ எழுதியது.
இந்தத் ‘தினமலர்’ செய்திகளை வெளியிடுவதில் எத்தனை தில்லுமுல்லு – திரிபு – திருகுதாளத்தில் கைதேர்ந்தது என்பதற்கு இதோ தினமலரிலிருந்தே எடுத்துக்காட்டுகள்.
சேலத்தில் ‘தினமலர்’ குரூப் நடத்தும் ‘காலைக்கதிரில்’ வரும் கடிதம் – அதே கடிதம் அடுத்து ‘தினமலரில்’ வெளிவரும். அதேபோல ‘தினமலரில்’ வெளிவரும் அதே கடிதம் சேலம் ‘காலைக்கதிரில்’ வெளிவரும்.
ஆனால் இந்தக் கடிதங்கள் வேறு நபர்களின் பெயரில் இடம் பெறும்.
இந்த சிகாமணிகள் தான் வரலாறு பற்றி எல்லாம் வக்கணைப் பேசுகிறார்கள். வரலாற்றை ஆய்வு செய்ய பார்ப்பனர்களைத் தவிர – பார்ப்பனர் அல்லாதாரில் யார் இருக்கிறார்கள் என்று மார் தட்டுகிறார்கள்.
தினமலரின் திரிபுத்தனத்தை இதோ ஆதாரத் தோடு பாரீர்!
பொது மக்கள் எழுதுவது போன்றே வாசகர் கடிதங்களை போலியாக எழுதி வெளியிடுவதில் “தினமலர்” முன்னிலையில் உள்ளது. பின்வரும் வாசகர் கடிதங்கள் தினமலரில் வெளியானவை, இதே கடிதங்கள் அப்படியே வரிக்கு வரி மாறாமல் “காலைக்கதிர்” பத்திரிகையிலும் வந்துள்ளன.
(சென்னையிலிருந்து வெளியாகும் தினமலரின் கிளைப் பத்திரிகைதான் சேலம் மற்றும் பெங்களூர் நகரங்களில் வெளிவரும் காலைக்கதிர். தினமலர் முதலாளிகளின் மருமகள்களின் பெயரில்தான் காலைக்கதிர் உள்ளது) தினமலரில் வெளியான கடிதத்திற்கும் காலைக்கதிரில் வெளியான கடிதத் திற்கும் உள்ள ஒரே வேறுபாடு கடிதம் எழுதியதாக கூறப்படுபவரின் பெயரும், ஊரும்தான்.
இக்கடிதம் ரஜினி ரசிகர்களை திட்டமிட்டு தூண்டிவிடும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது.
ரஜினி ரசிகர்களை தூண்டிவிடும் நோக்கில் ‘வாசகர் கடிதம்’ என்ற போர்வையில் சென்னை – தினமலர் வெளியிட்ட போலி கடிதங்கள், புள்ளி, கால்புள்ளி, ஆச்சர்யக்குறி, அடைப்பு என எல்லாம் தினமலரில் உள்ளபடியே காலைக்கதிரிலும் உள்ளது.
இதுபோல பல நூறு கடிதங்கள் உண்டு (கலைஞர்), வைகோ, கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், அரசு ஊழியர்கள், தமிழ் அமைப்பினர், தலித் அமைப்பினர், காவல்துறையினர் இப்படி எல்லா தரப்பினரையும் தரக்குறைவாக திட்டியும், அவதூறு பரப்பும் வகையிலும் பல போலி கடிதங்களை தினமலர் வெளியிட்டுள்ளது. அவற்றை அப்படியே பெயரையும், ஊரையும் மாற்றி தினமலரின் பினாமி காலைக்கதிரும் வெளியிட்டுள்ளது. இவ்வாறு தினமலரில் வெளியாகும் கடிதங்களில் 80 சதவீதம் கடிதங்கள் காலைக்கதிரில் வெளியாகிறது.
தினமலர் 30-1-2004
ரஜினி ரசிகர்களே… உஷார்!
எம்.சுரேஷ். கடலூரிலிருந்து எழுதுகிறார்: ‘ரஜினி செயின் ஸ்மோக்கர்; சிகரெட், பீடிகளை ஆகாயத்தில் தூக்கிப் போட்டு, வாயில் பிடித்து, ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்குவார். எல்லா ரும் தீக்குச்சியைப் பெட்டியில் உரசினால், இவர் பெட்டியைத் தீக்குச்சியில் உரசி பற்ற வைப்பார். கேட்டால் என் வழி தனி வழி என்பார். இத்தகைய வாழ்க்கை முறை வேலைக்குப் போகிறவர்களுக்கும், அன்றாடங்காய்ச்சிகளுக்கும் ஒத்து வராது…’ என்றெல்லாம், ரஜினி ரசிகர்களாகிய நம்மைப் பற்றியும், ரஜினி பற்றியும் இழித்தும், பழித்தும் பேசி கேவலப்படுத்தியவர் பா.ம.க., ராமதாஸ்.
இவரது கட்சிக்கும், இவர் சேர்ந்துள்ள அணிக்கும் பாடம் புகட்ட, இனி நம்மைப்பற்றி வாய் திறக்காமல் இருக்க வைக்க, நமக்கு சரியான சந்தர்ப்பம் ஒன்று வந்து விட்டது: உஷாராகச் செயல்படுவோம்!
காலைக்கதிர் 3-2-2004
ராமதாஸுக்கு பாடம் புகட்டுவோம்!
ம.முத்துக்குமார் ஈரோட்டிலிருந்து எழுதுகிறார்: ‘ரஜினி செயின் ஸ்மோக்கர்; சிகரெட், பீடிகளை ஆகாயத்தில் தூக்கிப் போட்டு, வாயில் பிடித்து, ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்குவார். எல்லாரும் தீக்குச்சியைப் பெட்டியில் உரசினால், இவர் பெட்டியைத் தீக்குச்சியில் உரசி பற்ற வைப்பார். கேட்டால் என் வழி தனி வழி என்பார். இத்தகைய வாழ்க்கை முறை வேலைக்குப் போகிறவர்களுக்கும், அன்றாடங்காய்ச்சிகளுக்கும் ஒத்து வராது…’ என்றெல்லாம், ரஜினி ரசிகர்களாகிய நம்மைப் பற்றியும், ரஜினி பற்றியும் இழித்தும், பழித்தும் பேசி கேவலப்படுத்தியவர் பா.ம.க., ராமதாஸ்.
இவரது கட்சிக்கும், இவர் சேர்ந்துள்ள அணிக்கும் பாடம் புகட்ட, இனி நம்மைப்பற்றி வாய் திறக்காமல் இருக்க வைக்க, நமக்கு சரியான சந்தர்ப்பம் ஒன்று வந்து விட்டது: உஷாராகச் செயல்படுவோம்!
தினமலர் 31-1-2004
பாடம் புகட்டுவோம் ராமதாசுக்கு!
ஆர்.இராஜவேல் விருதுநகரிலிருந்து எழுதுகிறார். இன்று வரை நமது ரஜினி, யாருடைய மனதையும் புண்படுத்தியது கிடை யாது. ஆனால், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நமது தலைவரின் ‘பாபா’ படத்தை இழிவாக எண்ணி, நமக்கும், நமது தலைவருக்கும் தொந்தரவு கொடுத்தார். மக்களிடம் பேர் வாங்க வேண்டும் என்பதற்காக, குடிக்கிறார், சிகரெட் பிடிக்கிறார் என்று பிரச்சாரம் செய்தார். இதற்கு முன் எந்தப் படத்திலும் யாரும் குடிக்கவில் லையா? பீடி பிடிக்கவில்லையா?
ரஜினி ரசிகர்களாகிய நாம் இன்று நமது தலைவருக்கும், அரசியல்வாதிகளுக்கும். நமது பலத்தைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ராமதாஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும் நமது பலத்தை காட்ட வேண்டும் என்று எண்ணிவிட வேண்டாம்; ராமதாஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் அனைத்து கட்சிகளுக்கும் நமது பலத்தைக் காட்ட வேண்டும். இதனால் எதிர் கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பது இல்லை, உங்கள் தொகுதியில் போட்டியிடும் ஒரு சுயேச்சைக்குக் கூட நல்லவரா என்று தெரிந்து ஓட்டளிக்கலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் ஓட்டளிக்காமல் மட்டும் இருக்கக் கூடாது.
காலைக்கதிர், 4-2-2004
பலத்தைக் காட்டுவோம்
மு.ரஜினிபித்தன், கரூரிலிருந்து எழுதுகிறார்: இன்று வரை நமது ரஜினி, யாருடைய மனதையும் புண்படுத்தியது கிடை யாது. ஆனால், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நமது தலைவரின் ‘பாபா’ படத்தை இழிவாக எண்ணி, நமக்கும், நமது தலைவருக்கும் தொந்தரவு கொடுத்தார். மக்களிடம் பேர் வாங்க வேண்டும் என்பதற்காக, குடிக்கிறார், சிகரெட் பிடிக்கிறார் என்று பிரச்சாரம் செய்தார். இதற்கு முன் எந்தப் படத்திலும் யாரும் குடிக்கவில் லையா? பீடி பிடிக்கவில்லையா?
ரஜினி ரசிகர்களாகிய நாம் இன்று நமது தலைவருக்கும், அரசியல்வாதிகளுக்கும். நமது பலத்தைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ராமதாஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும் நமது பலத்தை காட்ட வேண்டும் என்று எண்ணிவிட வேண்டாம்; ராமதாஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் அனைத்து கட்சிகளுக்கும் நமது பலத்தைக் காட்ட வேண்டும். இதனால் எதிர் கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பது இல்லை, உங்கள் தொகுதியில் போட்டியிடும் ஒரு சுயேச்சைக்குக் கூட நல்லவரா என்று தெரிந்து ஓட்டளிக்கலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் ஓட்டளிக்காமல் மட்டும் இருக்கக் கூடாது.
தினமலர் 23-1-2004
ரசிகர்களே ஒன்று திரளுங்கள்!
வி.பி.கே.சரவணன், சின்னமனூரிலிருந்து எழுதுகிறார்: அரசியல்வாதிகள் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இப்போது இருக்கின்றனர். அரசியலில் தாங்கள் இழந்த செல்வாக்கை திரும்பப் பெற இந்த அரசியல்வாதிகள் எதற்கும் துணிவர்.
‘ஜாதிய’ அரசியல்வாதிகள், இழந்த தங்கள் அரசியல் செல்வாக்கைப் பெற நினைத்து கமலையும், ரஜினியையும் தேவையில்லாமல் வம்புக்கிழுத்து சீப் பப்ளிசிட்டியைத் தேடிக் கொண்டனர்.
‘பாபா’ பட வெளியீட்டின் போது, தரக்குறைவாக ரஜினியை விமர்சித்து, ரசிகர் உள்ளங்களை புண்படுத்தினார். தினமும் ஒரு கட்சி கூட்டணியோடு உறவு கொள்ளும், பா.ம.க., ராமதாஸ்.
அதேபோல் படம் வெளிவராத போதே, எடுக்கக்கூட விடாமல் கமலின் ‘சண்டியர்’ படத்திற்கு முட்டுக்கட்டைப் போட்டு சீப் பப்ளிசிட்டி தேடிக் கொண்டார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி.
ராமதாசும், கிருஷ்ணசாமியும் ரஜினியையும், கமலையும் திட்டியபோது கண்டிக்கக் கூட மனமின்றி, இந்த ஜாதிக் கட்சித் தலைவர்களை விமர்சனம் செய்யாமலிருந்தார் கருணாநிதி.
இவர்களுக்குத் தக்க பாடம் புகட்ட விரைவில் பார்லிமென்ட் தேர்தல் வருகிறது. ராமதாசையும், கிருஷ்ணசாமியையும், கருணாநிதியையும் தண்டிக்க தக்க தருணம் இதுவே.
இவர்களுக்கு எதிராக ரசிகர்கள் ஓட்டளித்து, பாடம் புகட்ட வேண்டும்; கமல் – ரஜினி ரசிகர்களின் பலத்தை இவர்களுக்குக் காட்ட வேண்டும்!
காலைக்கதிர் 28-1-2004
ரசிகர்களே பாடம் புகட்ட தயாரா?
என்.வடிவேலு, பெங்களூரிலிருந்து எழுதுகிறார்: அரசியல்வாதிகள் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இப்போது இருக்கின்றனர். அரசியலில் தாங்கள் இழந்த செல்வாக்கை திரும்பப் பெற இந்த அரசியல்வாதிகள் எதற்கும் துணிவர்.
‘ஜாதிய’ அரசியல்வாதிகள், இழந்த தங்கள் அரசியல் செல்வாக்கைப் பெற நினைத்து கமலையும், ரஜினியையும் தேவையில்லாமல் வம்புக்கிழுத்து சீப் பப்ளிசிட்டியைத் தேடிக் கொண்டனர்.
‘பாபா’ பட வெளியீட்டின் போது, தரக்குறைவாக ரஜினியை விமர்சித்து, ரசிகர் உள்ளங்களை புண்படுத்தினார். தினமும் ஒரு கட்சி கூட்டணியோடு உறவு கொள்ளும், பா.ம.க., ராமதாஸ்.
அதேபோல் படம் வெளிவராத போதே, எடுக்கக்கூட விடாமல் கமலின் ‘சண்டியர்’ படத்திற்கு முட்டுக்கட்டைப் போட்டு சீப் பப்ளிசிட்டி தேடிக் கொண்டார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி.
ராமதாசும், கிருஷ்ணசாமியும் ரஜினியையும், கமலையும் திட்டியபோது கண்டிக்கக் கூட மனமின்றி, இந்த ஜாதிக் கட்சித் தலைவர்களை விமர்சனம் செய்யாமலிருந்தார் கருணாநிதி.
இவர்களுக்குத் தக்க பாடம் புகட்ட விரைவில் பார்லிமென்ட் தேர்தல் வருகிறது. ராமதாசையும், கிருஷ்ணசாமியையும், கருணாநிதியையும் தண்டிக்க தக்க தருணம் இதுவே.
இவர்களுக்கு எதிராக ரசிகர்கள் ஓட்டளித்து, பாடம் புகட்ட வேண்டும்; கமல் – ரஜினி ரசிகர்களின் பலத்தை இவர்களுக்குக் காட்ட வேண்டும்!
தினமலர் 6-2-2004
‘ரசிகர்களால் தொல்லை தான்!’
எம்.கரிகாலன், சிதம்பரத்திலிருந்து எழுதுகிறார்: பா.ம.க. ராமதாசை வம்புக்கு இழக்கும் விதமாக ரஜினி ரசிகர்கள் பேசியும், செயல்பட்டும் வருகின்றனர்.
ராமதாஸ் தனி நபர் அல்ல, அவருக்கு பின்னால் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் வன்னியர்கள் 1.5 கோடிக்கும் மேல் உள்ளனர். அவர்கள் அனைவரும் ராமதாசை ஏற்கவில்லை என்றாலும், அவருக்கு ஆபத்து என்று வரும் போது பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.
‘பாபா’ படப் பிரச்னை முடித்து போன விவகாரம், அதை மீண்டும் பெரிதாக்கினால் பிரச்னை இருவருக்கும்தான், ரஜினி ரசிகர்களை விட வீரமும், பலமும் எங்களுக்கு உள்ளது.
கடந்த 1987ம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில், இந்திய துணை ராணுவம் மற்றும் போலீசின் துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் சுமந்து 21 பேர் உயிர் விட்டனர். ராமதாசுக்காக எந்த தியாகமும் செய்யத் தயார் நிலையில் பா.ம.க.வில் தொண்டர்கள் உள்ளனர்.
எங்களை சீண்டிப் பார்த்தால் சரியான பதிலடி கொடுப்போம், அமைதியை விரும்பும் ரஜினிக்கு, அவரது ரசிகர்களால் தொல்லை தான். இது எப்போது அவருக்கு புரியுமோ?
காலைக்கதிர் 10-2-2004
வம்புக்கு இழுக்கும் ரஜினி ரசிகர்களுக்கு
ஆர்.ஜெயராமன், சங்ககிரியிலிருந்து எழுதுகிறார்: பா.ம.க. ராமதாசை வம்புக்கு இழக்கும் விதமாக ரஜினி ரசிகர்கள் பேசியும், செயல்பட்டும் வருகின்றனர்.
ராமதாஸ் தனி நபர் அல்ல, அவருக்கு பின்னால் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் வன்னியர்கள் 1.5 கோடிக்கும் மேல் உள்ளனர். அவர்கள் அனைவரும் ராமதாசை ஏற்கவில்லை என்றாலும், அவருக்கு ஆபத்து என்று வரும் போது பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.
‘பாபா’ படப் பிரச்னை முடித்து போன விவகாரம், அதை மீண்டும் பெரிதாக்கினால் பிரச்னை இருவருக்கும்தான், ரஜினி ரசிகர்களை விட வீரமும், பலமும் எங்களுக்கு உள்ளது.
கடந்த 1987ம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில், இந்திய துணை ராணுவம் மற்றும் போலீசின் துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் சுமந்து 21 பேர் உயிர் விட்டனர். ராமதாசுக்காக எந்த தியாகமும் செய்யத் தயார் நிலையில் பா.ம.க.வில் தொண்டர்கள் உள்ளனர்.
எங்களை சீண்டிப் பார்த்தால் சரியான பதிலடி கொடுப்போம், அமைதியை விரும்பும் ரஜினிக்கு, அவரது ரசிகர்களால் தொல்லை தான். இது எப்போது அவருக்கு புரியுமோ?
தினமலரின் தில்லுமுல்லுகளைப் பார்த்தீர்களா? இவர்கள்தான் பார்ப்பனர் அல்லாதாரில் வரலாற்று நிபுணர்கள் யார் இருக்கிறார்கள் என்று கேட்கிறார்கள். புரிந்துகொள்வீர்!!