திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் அருமை மகன் மணிமன்ற வாணன் (வயது 78) சென்னையில் நேற்று (19.10.2024) மறைவுற்றார் என்ற செய்தியை அறிந்து வருந்துகிறோம். பாவாணருக்கு உற்ற துணையாக இருந்தவர். ‘பாவாணர் நினைவலைகள்’ என்ற நூலை எழுதியவர். அடிக்கடி சந்தித்து உரையாடக் கூடிய – பழகுவதற்கு இனிய நண்பர். அவர் பிரிவால் ஆறாத் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரின் வாழ்விணையர் அவர்களுக்கும், செல்வங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை
20.10.2024
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்